???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு! 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
 • எம்ஜிஆர் பெயர் வைக்க முடியுமா?

  img

  அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு என பெயர் வைத்துள்ள ஜெயலலிதா இதற்கு எல்லாம் எம்.ஜி.ஆர். பெயரை வைக்க முடியுமா? திமுகவும், அதிமுகவும் விஷ செடிகள்.மக்களுக்காக நான் என்று கூறும் ஜெயலலிதாவுக்கு ஏழைகளின் பசி பற்றித் தெரியுமா?

  - தேவகோட்டை பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

   
 • மகாராணி ராஜ்ஜியம்

  img

  மக்கள் என்ன ஆனார்கள்? என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கின்ற ஒரு மகாராணி ராஜ்யத்தை எவ்வளவு நாளைக்கு நாம் அனுபவிப்பது என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.

  - சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய திமுக தலைவர் மு. கருணாநிதி

   
 • அறிவாலயத்தை பிடிக்கலாம்; ஆட்சியை பிடிக்க முடியாது!

  img

  அறிவாலயத்தை வேண்டுமென்றால் மு.க. ஸ்டாலின் பிடிக்கலாம் ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியாது

  - திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

   
 • வாக்குகளை விற்காதீர்

  img

  மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது, நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பணத்திற்காகவோ பரிசுப்பொருளுக்காகவோ ஆசைப்பட்டு தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது

  - நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான நம்பிக்கை இல்லத்தைத் திறந்து வைத்த சகாயம் ஐஏஎஸ் பேசியது...

   
 • அவருக்கு எதிரி அவரே!

  img

  கருணாநிதிக்கு ஜெயலலிதா எதிரி, ஜெயலலிதாவிற்கு கருணாநிதி எதிரி, ஆனால் கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருக்கும் நான்தான் எதிரி. மு.க.ஸ்டாலினுக்கு அவரேதான் எதிரி. அவர் எண்ணங்களே எதிரி.

  - மாமண்டூரில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது....

   
 • என் வாழ்நாள் குற்றம்!

  img


  6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன். அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச்…

   
 • கைதேர்ந்தவர்கள்!

  img

  கைதேர்ந்தவர்கள்!

  அதிமுக என்பது நயவஞ்சக தலைமை. நம்ப வைத்து கழுத்தறுப்பது, பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஏமாற்றுவது இதெல்லாம் அங்கே சாதாரணம். சகோதரர் வேல்முருகனுக்காக நான் வருத்தப்படுகிறேன்.

  - அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் இடம் அளிக்காதது குறித்து வைகோ பேசியது.

   
 • வேறு யாருக்கு தகுதி இருக்கிறது?

  img

  கேப்டன் விஜயகாந்துக்கு முதலமைச்சராகும் தகுதியில்லை என்றால், வேறு யாருக்கு தகுதி இருக்கிறது

  மதுரையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில்  பேசிய பிரேமலதா விஜயகாந்த்...

   
 • எந்த பாதிப்பும் இல்லை!

  img

  தேமுதிக மக்கள் நல கூட்டணியோடு இணைந்திருப்பது திமுகவுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது!

  தேமுதிக மக்கள் நல கூட்டணியோடு இணைந்திருப்பது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின்.

   
 • நம்பிக்கையை இழக்கவில்லை!

  img

  நான் தேமுதிக கூட்டணி குறித்து தெரிவித்த நம்பிக்கையை என்னைப் பொறுத்தவரையில் இன்னும் இழந்து விடவில்லை.

   

  - தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் கருணாநிதி

   
 • அதிமுகவிற்குள் பூகம்பம்!

  img

  அதிமுகவிற்குள் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருக்கிறது. அதிமுகவின் முக்கிய பொறுப்புக்களை ஏற்று நடத்திய ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தற்போது முதல்வரின் நிகழ்ச்சிகளில் கூட பங்கெடுப்பதில்லை. கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் அதிமுகவினர் கொள்ளையடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறா அல்லது கொள்ளையடித்த பணத்தை தலைமைக்கு காட்டவில்லை என்பதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மேலும், இரண்டு அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடப்பதாக செய்திகள்…

   
 • தனித்துப் போட்டி

  எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. கூட்டணி குறித்து தொண்டர்கள் யாரும் குழம்ப வேண்டாம்.

  - சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மகளிரணி மாநாட்டில் பேசிய விஜயகாந்த்

   
 • பழம் கனிந்து கொண்டிருக்கிறது!

  செய்தியாளர்:- அனைவரும் எதிர்பார்க்கும் ஒரே கேள்வி, தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி முடிவாகிவிட்டதா?

  கருணாநிதி:- பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை.

  செய்தியாளர்:- தே.மு.தி.க கூட்டணி முடிவாவதில் ஏன் இந்தத் தாமதம்? இழுபறிக்கு என்ன காரணம்? அவர்களுடைய கோரிக்கை என்ன?

  கருணாநிதி:- இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது…

   
 • எங்களைவிட யார் நேர்மையானவர்கள்?

  img

  மலையளவு பண பலத்துடன் அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தலைச் சந்திக்கப் போகின்றன. ஊழல் பணமும், பகட்டும் வெற்றியைத் தரும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

  அறவழியில் ஆட்சியை நடத்துவோம் என்ற உறுதியை வழங்கி நிற்கிறோம். அகந்தையில் சொல்லவில்லை, இங்கே எங்களைவிடவும் நேர்மையானவர்கள் யார் இருக்கிறார்கள்?

  - தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சிப் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மதிமுக…

   
 • மோடி ’பாஸ்’

  img

  2016-2017ஆம் ஆண்டுக்கான இந்த நிதி நிலை அறிக்கை “நான் எழுதும் பரிட்சை” என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியிருக்கிறார். திரு. ஜெட்லியின் நிதி நிலை அறிக்கை மூலமாக இந்தப் பரிட்சையில் திரு மோடி அவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முழுமையான வெற்றி பெற்றிருக்கிறாரா என்பதை நிதி நிலை அறிக்கை நடைமுறைக்கு வந்து அது ஏற்படுத்தும் மாற்றங்களையும், விளைவுகளையும் பொறுத்தே கூற முடியும். எனினும் பிரதமர் மோடி அவர்கள்…

   
 • கோஷ்டிகளுக்கு இல்லை

  img

  அதிருப்தியாளர்கள், எனக்குப் பிடிக்காதவர்கள் என்றெல்லாம் பார்க்காமல் காங்கிரஸின் உண்மையான தொண்டர்களுக்கு சோனியா காந்தி, ராகுலின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே சீட் தரப்படும். கோஷ்டிகளுக்கு சீட் கொடுக்கும் முறை தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இனி இருக்காது

  - சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

   
 • சினிமா வசனத்தை நம்பி திமுக

  img

  தமிழகத்தில் தரம் தாழ்ந்து பிரசாரம் நடக்கிறது. அண்ணா, பெரியார் வழியில் வந்த திமுக, ""என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?'' என்ற சினிமா வசனத்தை நம்பி இருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசிக் கொள்கின்றன. புதிதாகச் சொல்வதற்கு அவர்களிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எங்களிடம் தொலைநோக்குத் திட்டங்கள் உள்ளன. பாமக பிரசாரம் நாகரிகமாகவும், மக்கள் சிந்திக்கக் கூடியதாகவும் இருக்கும். பாமக பிரசாரப்…

   
 • கிங்கா? கிங்மேக்கரா?

  img

  எனக்கு சினிமாவில் நடிக்கத்தெரியும்.. மக்களிடம் நடிக்கவும் ஏமாற்றவும் தெரியாது. கூட்டணி குறித்து யோசித்து வருவதாககிறேன். தமிழக அரசியலில் “கிங்” ஆக இருக்க வேண்டுமா?, கிங் மேக்கராக இருக்க வேண்டுமா? என்று நீங்கள் சொல்லுங்கள்.

  - காஞ்சிபுரம் வேடலில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த்...

   
 • குழப்பம் தேவையில்லை

  img

  மகனுக்கும், தந்தைக்கும் இடையே பிளவு வரும், நாம் ரத்தம் குடிக்கலாம் என்று காத்திருக்கும் எதிர் வீட்டு சீமாட்டி ‘ஆப்பசைத்த குரங்கை’ப் போல் ஏமாறப் போவது நிச்சயம். கதையில் வரும் பேராசை பெருமாட்டியை பற்றித்தான் நான் இங்கே விளக்கினேன். அது யாரோ என்று எண்ணிக்கொண்டு, நீங்கள் யாரும் குழப்பம் அடையத்தேவையில்லை.

  - திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக்கதைக்கு, திமுக தலைவர்…

   
 • கெஞ்சுகிறது திமுக!

  img

  அரசியல் கட்சி நடத்துவதற்கு தகுதியே இல்லாத விஜயகாந்திடம் கெஞ்சுகின்ற நிலையில் தி.மு.க. உள்ளது. மக்கள் ஒருபோதும் தி.மு.க கவை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

  - திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

   
 • ஏழைத்தாயின் மகன்!

  img

  தேநீர் விற்றவர் எவ்வாறு இந்தியாவின் பிரதமர் ஆனார் என பல பேர் வேதனைப்படுகிறார்கள். ஏழைத்தாயின் மகன் பிரதமர் ஆனதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  கோவையில் உரையாற்றியபோது பிரதமர் மோடி...

   
 • பாஜக வரட்டும்!

  img

  தனித்து நின்று தேர்தலை சந்தித்து வெற்றி பெறும் வலிமையும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் பாமகவுக்கு மட்டுமே உண்டு. வேண்டுமானால் பாஜக எங்களோடு வரட்டும்!

  சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான பாமக நிலைப்பாடு மிகவும் தெளிவானது. கூட்டணி, தொகுதிப் பங்கீட்டு பேச்சுக்களை பாமக தலைமைதான் நடத்தும். மற்ற கட்சிகளிடம் தொகுதிகளுக்கு நிற்க வேண்டிய நிலையில் பாமகவுக்கு இல்லை.

  பாமகவுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் வலிமையுடன் தமிழகத்தில்…

   
 • பெருமைபடுத்தப்படுவதாக உணர்கிறேன்

  img

  எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பத்ம விபூஷண்’ மிகவும் மரிதையாதைக்குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த என் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகிய அத்தனைபேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  - ரஜினிகாந்த்  டுவிட்டரில் தெரிவித்த கருத்து...

   
 • அநீதி!

  img

  தவறு செய்த இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்திருப்பது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி.

  - மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த விஜயதாரணி...

   
 • போட்டிக்கு தகுதியில்லை!

  img

  ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தும், இதன் மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.  தங்களது உத்தரவில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தக் கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் தகுதி காளைகளுக்கு இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...