???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
 • மரபு

  img

  குடியரசுத் தலைவர் தமிழகத்துக்கு வந்தபோது, மரபுகளின்படி முதல்வர் ஜெயலலிதா அவரை வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, காவிரிப் பிரச்சினையில் தமிழகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்று முறையிட்டிருக்க வேண்டும்.

  கலைஞர் மு.கருணாநிதி, திமுக தலைவர்.

   
 • சர்ச்சை

  img

  தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். முதல்வர் மெகபூபா, நாய் வாலை போன்றவர். நாய் வாலை நேராக்க முடியாது. மெகபூபாவையும் மாற்ற முடியாது. மெகபூபாவுடன் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது.  தன்னை மாற்றிக்கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் காஷ்மீரில் அவரது கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்துள்ளது. லால்டெங்காவும் பயங்கரவாதியாக இருந்தவர்தான். ஆனாலும், அவர் மிசோரம் முதல்வராக தேர்வு பெற்று வெற்றிகரமாக ஆட்சி நடத்தி…

   
 • அவர் வந்திருக்கலாமே?

  img

  89  திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கட்சித் தலைவரை இடை நீக்கம் செய்யவில்லையே. அவர் வந்திருக்கலாமே? துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும். பேசியிருக்க வேண்டும்.

  வேண்டுமென்றே திமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், சஸ்பெண்ட் செய்யப்படாத திமுகவினர், அவைக்கு வந்தார்களே, அவர்கள் விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே?

   
 • அனுதாபம் தேவையில்லை

  img

  சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு, பிரதமர் மோடி தலித்துகள் விவகாரத்தில் அக்கறை உள்ளவரைப் போலக் கருத்து தெரிவித்து வருகிறார். தாக்குதல் சம்பவங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  - மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்

   
 • என்னைத் தாக்குங்கள்!

  img

  தலித்துகளைத் தாக்குவதற்குப் பதிலாக என்மீது தாக்குதல் நடத்தலாம். வேண்டுமானால் தம்மை துப்பாக்கியால் கூட சுடலாம். தலித் மக்களைப் புறக்கணித்தால் இந்த உலகம் நம்மை மன்னிக்காது. சமூக விரோத சக்திகளிடமிருந்து இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

  - ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்திம் பிரதமர் மோடி பேச்சு

   
 • அன்புக்கு அடிமை

  img

  நேற்று எதிர்க்கட்சி தலைவர் இந்த அவையில் பேசும்போது, எங்களை அடிமை என்று கூறினார். எங்களுக்கு அம்மா தான் தெய்வம். அவரது அன்புக்கு நாங்கள் அடிமை. அவரது பாசத்திற்கு நாங்கள் அடிமை. ராணுவத்தில் உயர் அதிகாரிகள் கட்டளைக்கு சிப்பாய்கள் அடிபணிவது கடமை. அம்மாவின் கட்டளைக்கு அடிபணிய 1½ கோடி தொண்டர்கள் தயாராக இருக்கிறோம்.

   
 • மகிழ்ச்சி!

  img

  ‘கபாலி’ படத்தின் மிகப் பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை நேரடியாக பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.

  - ‘கபாலி’ வெற்றிக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் கடிதம்..

   
 • 'அம்மா என்ற சிங்கமே!'

  img

  கனிவு , இரக்கம், ஈகை இலக்கணமாக , மக்களுக்காக துடிக்கின்ற மனித தெய்வமே, மக்களால் நான் , மக்களுக்காகவே நான் என்ற தியாகத்தில் வாழும் சொரூபமே, புடம் போட்ட தங்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில் 6-ம் முறை தமது ஆற்றல் கரங்களில் செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்தும் அம்மா என்ற சிங்கமே , 10 கோடி தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பத்திரை மாத்து தங்கமே , வீரத்திருமகளே…

   
 • எந்த கொம்பனாலும் முடியாது

  img

  தற்போது ஏற்பட்டுள்ளது தோல்வி அல்ல. அதற்காக எந்த தொண்டரும், கட்சி நிர்வாகியும் சோர்வடையத் தேவையில்லை. தேர்தலுக்காக மட்டும் மக்களைச் சந்திக்கும் அரசியல் கட்சி திமுக அல்ல. அரசியல் மற்றும் தேர்தலை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தரும் விடுதலை இயக்கமாக திமுக இருந்து வருகிறது.

  திருவாரூர் தொகுதியில் 2-ஆவது முறையாக மண்ணின் மைந்தர் என்ற உரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி…

   
 • ராஜதந்திரம்

  img

  என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜதந்திரத்தால், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும் கூட திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.

  -    திருச்சியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ.

   
 • 'அம்மா காலெண்டர்' உரை!

  img

  அம்மா கால அட்டவணையாக, அதாவது அம்மா காலெண்டராக ஆளுநர் அறிக்கை வாசித்திருக்கிறார். ஏற்கனவே உள்ள திட்டங்கள், ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள் அதைத்தான் இந்த ஆளுநர் உரையிலே அரசு சொல்லியிருக்கிறது.

  - ஆளுநர் உரை குறித்து சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்

   
 • பாடம் கற்பிக்க வேண்டும்!

  img

  திமுகவை ஒழிக்க நினைக்கும் தேர்தல் ஆணையத்திற்கு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். திமுக ஆட்சியில், குடிசைகளை கோபுரங்கள் ஆக்கி ஏழை எளியவர்கள் அற்ற சமத்துவம் கொண்டு வந்தோம். சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பிரதமர் மோடி முன்கூட்டியே ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து பாரதிய ஜனதா கட்சியினர் விளக்கம் அளிக்க வேண்டும். திருப்பூரில், பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து பதிலளிக்கவில்லை…

   
 • தனித்து போட்டியிட தயாரா?

  img

  காங்கிரஸ் தனித்து தேர்தலை சந்தித்திருந்தால், பாரதிய ஜனதாவை விட அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்திருக்கும். 4 தொகுதிகளில் அதிமுகவை பாரதிய ஜனதா பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதை இளங்கோவன் உணர வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயாரா?


  தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என தமிழ்நாடு ‌காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்…

   
 • நன்றி!

  img

  தமிழக மக்களுக்கு நன்றி! தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. குடும்ப ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். திமுகவின் பொய்ப்பிரச்சாரங்களை மக்கள் தவிடுபொடியாக்கிவிட்டனர்.

  -தேர்தல் வெற்றி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா

   
 • தயார்!

  img

  நாளை காலை 8 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணிகள் துவங்குகின்றன.  ஒவ்வொரு சுற்று முடிந்ததும் 5 நிமிடத்தில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படும்.

  - தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி

   
 • குட்டிச்சுவராக்கிவிட்டோமா?

  img

  தமிழகத்தைத் திராவிட இயக்கங்கள் குட்டிச்சுவராக்கிவிட்டன என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். அவரை நல்லவர் என்று நினைத்தேன். அவர் பேச்சில் வல்லவராகி இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், வெங்கய்ய நாயுடு தமிழகத்திலேயே பெரும்பாலும் வசித்துக் கொண்டுதான் இப்படிப் பேசியுள்ளார்.

  - சென்னை கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் ஞாயிற்றுக்கிழமை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களை…

   
 • எம்ஜிஆர் பெயர் வைக்க முடியுமா?

  img

  அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு என பெயர் வைத்துள்ள ஜெயலலிதா இதற்கு எல்லாம் எம்.ஜி.ஆர். பெயரை வைக்க முடியுமா? திமுகவும், அதிமுகவும் விஷ செடிகள்.மக்களுக்காக நான் என்று கூறும் ஜெயலலிதாவுக்கு ஏழைகளின் பசி பற்றித் தெரியுமா?

  - தேவகோட்டை பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

   
 • மகாராணி ராஜ்ஜியம்

  img

  மக்கள் என்ன ஆனார்கள்? என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கின்ற ஒரு மகாராணி ராஜ்யத்தை எவ்வளவு நாளைக்கு நாம் அனுபவிப்பது என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.

  - சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய திமுக தலைவர் மு. கருணாநிதி

   
 • அறிவாலயத்தை பிடிக்கலாம்; ஆட்சியை பிடிக்க முடியாது!

  img

  அறிவாலயத்தை வேண்டுமென்றால் மு.க. ஸ்டாலின் பிடிக்கலாம் ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியாது

  - திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

   
 • வாக்குகளை விற்காதீர்

  img

  மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது, நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பணத்திற்காகவோ பரிசுப்பொருளுக்காகவோ ஆசைப்பட்டு தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது

  - நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான நம்பிக்கை இல்லத்தைத் திறந்து வைத்த சகாயம் ஐஏஎஸ் பேசியது...

   
 • அவருக்கு எதிரி அவரே!

  img

  கருணாநிதிக்கு ஜெயலலிதா எதிரி, ஜெயலலிதாவிற்கு கருணாநிதி எதிரி, ஆனால் கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருக்கும் நான்தான் எதிரி. மு.க.ஸ்டாலினுக்கு அவரேதான் எதிரி. அவர் எண்ணங்களே எதிரி.

  - மாமண்டூரில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது....

   
 • என் வாழ்நாள் குற்றம்!

  img


  6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன். அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச்…

   
 • கைதேர்ந்தவர்கள்!

  img

  கைதேர்ந்தவர்கள்!

  அதிமுக என்பது நயவஞ்சக தலைமை. நம்ப வைத்து கழுத்தறுப்பது, பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஏமாற்றுவது இதெல்லாம் அங்கே சாதாரணம். சகோதரர் வேல்முருகனுக்காக நான் வருத்தப்படுகிறேன்.

  - அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் இடம் அளிக்காதது குறித்து வைகோ பேசியது.

   
 • வேறு யாருக்கு தகுதி இருக்கிறது?

  img

  கேப்டன் விஜயகாந்துக்கு முதலமைச்சராகும் தகுதியில்லை என்றால், வேறு யாருக்கு தகுதி இருக்கிறது

  மதுரையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில்  பேசிய பிரேமலதா விஜயகாந்த்...

   
 • எந்த பாதிப்பும் இல்லை!

  img

  தேமுதிக மக்கள் நல கூட்டணியோடு இணைந்திருப்பது திமுகவுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது!

  தேமுதிக மக்கள் நல கூட்டணியோடு இணைந்திருப்பது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின்.

   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...