"நண்பர்கள் ஒன்று சேர்ந்து 'முரட்டுத்தனமான நம்பிக்கையோடும் துணிச்சலோடும் 'அம்ருதா' கலை இலக்கிய மாத இதழைக் கொண்டு வருகிறோம்... 'அம்ருதா' எந்த சூழ்நிலையிலும் தனி மனிதர்களை முன்னிலைப்படுத்தாது. நிச்சயமாகக் குழு விவாதத்தில் இறங்காது. எந்தச் சந்தர்ப்பத்திலும் நடுநிலையைத் தவறவிடாது. எதன் பொருட்டும் தன் தனித்தன்மையிலிருந்து பிறழாது. சமுகத்தின் பொது நலனை முன்னிறுத்தி யார் எழுதினாலும் அதை வெளியிடுகிற முதல் இதழாக 'அம்ருதா' இருக்கும்" எனும் அறிவிப்புடன் வெளிவந்திருக்கிறது 'அம்ருதா' நவீன கலை இலக்கிய மாத இதழ்.
எழுத்தாளர் திலகவதியை சிறப்பாசிரியராகவும் 'பிரபு திலக்'கை ஆசிரியராகவும் , தொ.பரமசிவன் , இந்திரன், பேரா.தியாகராசன் , தேவேந்திர பூபதி , துரை . கீதா, ஆகியோரை ஆலோசகர்களாகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது 'அம்ருதா'.
ஆகஸ்டு 2006ல் வெளிவந்த முதல் இதழில் , உமா மகேஸ்வரி , தேவதேவன்,க்ருஷாங்கினி ஆகியோரது கவிதைகளும் இமையத்தின் சிறுகதையும் கன்னட மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் பெண்ணியக் கோட்பாட்டாளர் 'எலேன்சிஸ்' பற்றிய 'மெருசாவின் புன்னகை'(க.பஞ்சாங்கம்) 'ஹிட்லரும் உடைந்து போன இயக்கமும்' (இந்திரன்) ' குடவோலைமுறை தேர்தலா - திருவுளச்சீட்டா' (பொ.வேல்சாமி) ஆகிய கட்டுரைகளும் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் நேர்காணலும் 'நூல்நயம்' எனும் நூல்விமர்சனம் பகுதியும் வெளியாகியுள்ளது. 15 நிறுவனங்களின் விளம்பரங்கள் ஒரு இலக்கிய இதழுக்குக் கிடைத்திருப்பது வியப்பளிக்கிறது.
" எங்களிடம் பிரம்மாண்டமான பிரகடனங்கள் இல்லை. ஆனால் எளிய கனவுகள் உண்டு. அந்தக் கனவின் வெளிப்பாடுதான் அம்ருதா" என்கிறார் ஆசிரியர் பிரபு திலக்
சந்தாவிவரம்
தனி இதழ் - விலை å.15
முகவரி
எண்: 5, ஐந்தாம் தெரு,
சோமசுந்தரம் அவென்யு,
போரூர், சென்னை - 600116
தொலைபேசி - 22522277
மின்னஞ்சல் : amruthamagazine@yahoo.com
இணையமுகவரி : www.amruthamagazine.com
- மு. யாழினிவசந்தி
வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.
கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரே
மது மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
இனிய நந்தவனம்
|
|
| |
|