முற்போக்கு இயக்கங்களின் சார்பில் அரசியல் சார்ந்தும், கலை இலக்கியம் சார்ந்தும் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய இதழ்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய இதழ், 'தாமரை' - இலக்கிய மாத இதழ் ப. ஜிவானந்தத்தை ஆசிரியராகவும் மாஜினியைத் துணை ஆசிரியராகவும் கொண்டு 1958 இல் தொடங்கப்பட்டது. ஜிவானந்தத்திற்குப்பிற்கு மாஜினி பத்திரிகை பொறுப்பேற்றார். 1960 களில் தி.க.சிவசங்கரன் ஆ.பழனியப்பன், கே. ராமசாமி ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழு தாமரையை நடத்தியது. இவர்களது ஆசிரியர் பொறுப்பில் தாமரை கத்தாண்டுகள் வெளிவந்தது. 1965 முதல் 1973 வரை 100 இதழ்கள் வரை தி.க.சி. ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தார். 47 ஆண்டுகள். தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கம் இவ்விதழின் தற்போதைய ஆசிரியர், சி.மகேந்திரன். ஆசிரியர் குழு: பொன்னீலன், தேவ. பேரின்பன். ஜிவாவின் பல முக்கியமான கட்டுரைகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன. முற்போக்கு சிந்தனைகளை வெளிப்படுத்தும் கதை, கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம், நேர்காணல் போன்றவை வெளியாகி வருகின்றன.
சோவியத் ரஷ்யா உள்ளிட்ட உலக இலக்கியங்களையும் அண்டை மாநிலங்களின் படைப்புகளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது தாமரையின் முக்கிய பணியாகும். புதிய எழுத்தாளர்கள் பலரை தாமரை ஊக்குவித்து வளர்த்துள்ளது. குறிப்பாக தி.க.சி. பொறுப்பாசிரியராக இருந்த காலக்கட்டத்தில் பல நல்ல புதிய எழுத்தாளர்கள் தாமரை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொன்னிலன், பூமணி, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், கந்தர்வன், ச. தமிழ்ச் செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுசாமி, பிரபஞ்சன் போன்ற பலரைக் குறிப்பிடலாம்.
சிற்பி, புவியரசு, இன்குலாப், நா. காமராசன் தமிழ் நாடன், பாலா, மே.து. ராசுகுமார் எனப் பலரும் தாமரையில் எழுதியுள்ளனர்.
வியட்நாம் போராட்ட சிறப்பிதழ் சிறுகதை சிறப்பிதழ், கரிசல் சிறப்பிதழ், சிறுகதை சிறப்பிதழ், எனப் பல சிறப்பிதழ்களை தாமரை வெளியிட்டடிருக்கிறது.
சிறிய வடிவில் வெளிவந்து கொண்டிருந்த தாமரை தற்போது பெரிய வடிவில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
கா.சிவத்தம்பி, ஆர். நல்லகண்ணு, ஆ.சிவசுப்பரமணியன், வல்லிக்கண்ணன் சோலை சுந்தரபெருமாள், செ. கணேசலிங்கன், விழி. பா. இதயவேந்தன், மு.முருகேஷ் , அ. வெண்ணிலா, தலை முறை எழுத்தாளர்களும் தாமரையில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
முற்போக்கு இலக்கிய வளர்ச்சியில் தாமரையின் பங்கு முக்கியமானது.
சந்தா:-
தனி இதழ் - ரூ 10 /-
ஆண்டுச் சந்தா - ரூ 120 /
ஆயுள் சந்தா - ரூ 1000/-
முகவரி
ஆசிரியர்
'தாமரை'
பாலன் இல்லம்
18, செவாலியே சிவாஜி கணேசன் சாலை,
தியாகராய நகர்
சென்னை – 17
தொலைபேசி - 24347689
- மு. யாழினிவசந்தி
வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.
கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரே
மது மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
|
|
| |
|