![]() |
நீங்க Zincovit மாத்திரை சாப்பிட்டீங்களா? அப்டீன்னா இதுக்கு நீங்களும் காரணம்!Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 17 , 2020 06:20:40 IST
![]() கொரோனா பரவல் காரணமாக விட்டமின், தாது சத்துக்களை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சின்கோவிட் (Zincovit) மாத்திரைகள் கடந்த அக்டோபர் மாதத்தில் மற்ற மாத்திரைகளைவிட அதிகம் விற்பனையாகியிருக்கிறது.
இந்திய அளவில் நீரிழிவுக்கான மாத்திரைகளே இதுநாள் வரை அதிக அளவில் விற்பனையாகி வந்தன. ஆனால் கொரோனா பரவல் காலத்தில் எதிர்பாற்றலை மேம்படுத்துவதற்காக, மல்டிவிட்டமின் மாத்திரைகளை மக்கள் அதிகம் நாடியுள்ளனர்.
உள்நாட்டு சில்லறை மருந்து விற்பனையில் கடந்த அக்டோபர் மாதத்தின்போது, சின்கோவிட் மருந்து அதிகளவில் விற்பனையாகியிருக்கிறது. அபெக்ஸ் லேப்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் இந்த சின்கோவிட் மாத்திரையின் விற்பனை கடந்த அக்டோபரில் 50 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் அதிகளவில் விற்பனையான மருந்து என்கிற இடத்தை ஹியுமன் மிக்ஸ்டர்டின் (இன்சுலின்) தக்கவைத்திருந்தது. இம்மருந்து அக்டோபரில் 47 கோடிக்கு விற்பனையாகியிருந்து. ஆனால் வரலாற்றில் பிற தேவைக்கான மருந்துகளைவிட மல்டி வைட்டமின் 50 கோடிக்கு விற்பனையாகியிருப்பது இதுதான் முதல்முறை.
நோய்த்தொற்று காலத்தில் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்துவதற்கு மல்டிவிட்டமின் மாத்திரைகள் உதவுமென பரவலாக கருத்து நிலவியதன் மூலம் இவ்வாறு விற்பனை ஆகியிருக்கிறது.
|
|