அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

யுவராஜ் சிங் கைது: சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிப்பு

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   18 , 2021  10:24:21 IST

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் இன்னொரு கிரிக்கெட் வீரர் குறித்து சாதி ரீதியான கருத்துகளை தெரிவித்ததையடுத்து வழக்கு நிலுவையில் இருந்தது, இதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவினால் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு சிறிது நேரம் சிறையில் வைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 
இது தொடர்பாக கூறிய போலீஸ் அதிகாரி, “சட்ட ரீதியாக கைது செய்தோம், பிறகு ஹரியாணா மற்றும் பஞ்சாப் கோர்ட் உத்தரவுகளின் பேரில் அவரை ஜாமீனில் விடுவித்தோம். சனிக்கிழமையன்று ஹன்சிக்கு யுவராஜ் வந்த போது கைது செய்தோம். சில மணி நேரங்களில் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தோம்” என்றார்.
 
இது தொடர்பான கோர்ட் உத்தரவு என்னவெனில் யுவராஜ் சிங்கை கைது செய்தாலும் சில மணி நேரங்களில் அவரை உறுதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்பதே. வழக்கறிஞர் ரஜத் கல்சான் என்பவர்தான் யுவராஜ் மீது இந்த வழக்கை எஸ்.சி/எஸ்டி அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தார்.
 
“அதாவது யுவராஜ் சிங்கின் கருத்து தலித் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டது.” என்று வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார், ஆனால் இதனையடுத்தே யுவராஜ் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், “நான் என் நண்பர்களுடன் உரையாடிய போது நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன். இது தேவையற்றது. ஆனால் ஒரு பொறுப்புள்ள இந்தியனாக என் கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என்று மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...