அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தார்க்கும் முக்கியம்! - வெற்றிமாறன்

Posted : திங்கட்கிழமை,   மே   17 , 2021  20:50:15 IST

நடிகர் நிதிஷ் மறைவு குறித்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுப் பேசியுள்ள வீடியோவில், “நண்பர் நிதிஷ் மருத்துவமனையில் இருந்த தகவலை அறிந்து விசாரித்தபோது 2 நாட்களில் அவர் உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கலாம் என டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று காலையில் அவர் இறந்த செய்தி வந்தது. அவரை எனக்கு புதுப்பேட்டை காலகட்டத்தில் இருந்தே தெரியும்.



நான் அப்போது உதவி இயக்குநர். ஒரு நடிகராக அவர் வாழ்வு மேடு பள்ளங்களுடன் இருந்தது. அசுரன் படத்துக்குப் பின்னர் அவருக்கு நிறைய படவாய்ப்புகள் இருப்பதாக கூறி சந்தோஷப் பட்டார். இது அவருடைய குடும்பத்தினருக்கும், என்னைப் போல் அவரை அறிந்த நெருங்கிய நண்பர்களுக்கும் இழப்பு. பலரும் இந்த கொரோனாலாம் இல்லை. ஏமாற்று வேலை. சும்மா, இதன் நோக்கம் இதுதான் என பலவிதமாக சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த வருடம் நமக்குத் தெரியவில்லை என்றாலும் கூட நமக்குப் பிடித்தவர்களை, நெருக்கமானவர்களை கொரோனா தாக்குகிறது.



நாம் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலம் இது. முடிந்தவரை மாஸ்க் அணிவதை கடைபிடித்தால் கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என சொல்கிறார்கள். ஜப்பானில், கொரோனா வைரஸை வைத்து டெஸ்ட் செய்யும்போது மாஸ்க் அணிந்தால் 70 % தொற்றை தடுக்க முடியும் என கண்டறிந்துள்ளார்கள். மாஸ்கை மூக்குக்கு கீழே இருக்குமாறு என்றெல்லாம் இல்லாமல், சரியாக போட வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.



ஒருவேளை கொரோனா பாசிடிவாக இருந்தால், தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் மிகவும் நம்பும் மருத்துவர்களுடன் ஆலோசிக்கலாம். டாக்டர்கள் ஆக்ஸிஜன் அளவு 95%,94% என குறைவதை ஆக்ஸி மீட்டர் மூலம் அறிந்தால் கூட எச்சரிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். நாம் சரியான நேரத்துக்கு விரைவாக மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர்களின் சிகிச்சை நமக்கு உறுதுணையாக அமையும். மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லி வலியுறுத்துகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குத் தொற்று வருகிறது. நுரையீரல் பாதிப்பு பெரிதாக இல்லை என்கிறார்கள்.



எனக்கு வராது, நான் தினமும் ஆரோக்கியமான உடற்பயிற்சி செய்கிறேன், பாதிக்காது என்றெல்லாம் சொல்லக் கூடாதென நினைக்கிறேன். வீட்டை விட்டு வெளியே வரும் இளைஞர்கள் உடல் வலிமையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருக்கிறார்கள். ஆக இளைஞர்களுக்குப் பொறுப்பு இருப்பதாகப் பாருங்கள். மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தார்க்கும் முக்கியம்.! பொறுப்புடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை ஜெயிக்க முடியும். பாதுகாப்பாக இருங்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...