???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   17 , 2019  22:31:19 IST

கோவை புதூரைச் சேர்ந்த சத்யபிரியா, மாதவிடாய் பிரச்னைக்காக செல்வபுரம் பகுதியில் உள்ள மனோன்மணி சித்த வைத்திய சாலையில், சித்த மருத்துவர் குருநாதனிடம் சிகிச்சை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்கள் சிகிச்சை எடுத்த நிலையில் மாணவியின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாணவி ஏப்ரல் 22-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்தபோது மாணவிக்கு இரு சிறுநீரகங்களும் நுரையீரலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வந்த சத்யபிரியா இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலைமறியலில் இறங்கினர்.

மாணவியின் உயிரிழப்புக்கு சித்த மருத்துவர் குருநாதனே காரணமென குற்றம்சாட்டும் உறவினர்கள், குருநாதன் மீது செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆதங்கத்தை கொட்டுகின்றனர்.

புகாரில் சிக்கிய இந்த சித்த வைத்திய சாலை 20 ஆண்டுகளுக்கு மேலாக செல்வபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில், உறவினர்கள் அளித்த சித்த மருந்துகளின் மாதிரிகள் சோதனைக்காக மாவட்ட சித்த மருத்துவ அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு வந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், செல்வபுரம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்த மாணவிக்கு மாதவிடாய் பிரச்சினைக்கான மருத்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், சித்த மருத்துவ கவுன்சில் தங்களிடம் விசாரணை நடத்தியதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுத்து இருப்பதாகவும் மனோன்மணியம் சித்த மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...