???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி 0 துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி 0 காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி 0 “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து 0 இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் 0 ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

யாவர்க்குமாம் ஒரு காதல்- நாடக விமர்சனம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   12 , 2014  02:48:48 IST


Andhimazhai Image

சமீபத்தில் எழுத்தாளர் ஆனந்த் ராகவின் கதை வசனத்தில் யாவர்க்குமாம் ஒரு காதல் நாடகத்துக்குப் போயிருந்தேன். இது  ஷ்ரத்தாவின் 13 ஆவது நாடகமாம். இயக்கம்: கிருஷ்ணமூர்த்தி. சென்னை நாரதகான சபாவில் நடந்தது.

 

ஆரம்பத்தில் மெல்ல ஆரம்பித்து பிறகு ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களை இந்த நாடகம் முழுவதுமாக கவ்விக்கொண்டுவிட்டது.

 

காத்தாடி ராமமூர்த்தியின் ஆதிக்கம் முதல் சீனில் இருந்தே தொடங்கிவிடுகிறது. அமெரிக்காவில் இருக்கும் இரண்டு காதலர்களைச் சேர்த்துவைக்கத் திட்டம் போட்டு அது யாரும் ஊகிக்காத திசையில் பயணிக்க அவர் விழிக்கும் விழி இருக்கிறதே.. அவர் மிக எளிதாக மேடையில் பளிச் சென்று நவரசங்களையும் வரவழைக்கிறார். பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 

’’அமெரிக்காவில் எல்லாத்தையும் தலைகீழாத்தான் பண்ணுவீங்களா?’’

 

’’பேபி பாட்டம்னா என்ன?’’- ’நான் நல்ல பாம்பு, அவன் தண்ணி பாம்பு’ என்று அதிர்வெடிகளால் ஆன வசனங்கள்.

 

ஓரிடத்தில் இந்த மைலாப்பூர் பெண்கள் பண்ற லூட்டி என்று காத்தாடியார் கலாய்க்க…. வந்திருந்த மயிலாப்பூர்காரர்கள் மட்டுமில்லாமல் அத்தனைபேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

 

காத்தாடி ராமமூர்த்தியால் அண்ணா என்று அழைக்கப்படுகிறவருக்கு 60 வயதுக்கும் மேல் என்று வருகிறது. ஆனால் காத்தாடி ராமமூர்த்தியுடன் ஒப்பிடுகையில் என்னதான் மேக்-அப் போட்டாலும் அவருக்கு 45 வயதுதான் சொல்லலாம். ஜில்லென்று அவருக்கு ஒரு காதல் வருகிறது. மிகவும் மெனக்கெட்டு அழகான வசனங்களை எழுதி அந்த முதிர் காதலின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விரசம் இன்றி உருவாக்குகிறார் ஆனந்த் ராகவ்.

 

டாக்டர் ரோமியோவாக வருகிறவர் ஒரு கட்டத்துக்குமேல் முழு நாடகத்தையும் தன்கையில் எடுத்துக் கொண்டு ரகளை செய்கிறார். அவர் குடும்பங்களை சேர்த்துவைப்பவர். அவரால் முடியாதபோது அவரது  மனைவி பிரித்துவைக்கிறார். கடைசியில் இரண்டுக்குமே பீஸ் உங்க குடும்பத்துக்குத்தானா? என்று ஒரு அம்மணி கேட்கையில் கைத்தட்டல் அள்ளுகிறது.

 

பிரித்து வைப்பதில் வல்லவரான டாக்டர் ரோமியோவின் மனைவி ஆண்களை மட்டம்தட்டி ஒரு நீண்ட வசனம் பேசுகிறார் பாருங்கள். எனக்கு முன் வரிசையில் இருந்த ஒருபெண்மணி கைதட்டி அதை பெரு மகிழ்ச்சியுடன் ரசித்தார்.

 

ரோமியோ கூடவே கையில் வயலினுடன் ஒரு நெடுநெடுவென வளர்ந்த பையன் ஒருவர் வந்து பேசாமல் நின்று கவனத்தைக் கவர்கிறார். டாக்டர் ரோமியோவின் பாடி லேங்வேஜ், வசன உச்சரிப்பு மிக அருமை.

 

அருமையான இசை அமைப்பு, நல்ல ஒளி அமைப்பு. உறுத்தாத வசனங்கள். கதை அமைப்பிலும் இறுதிக்கட்டத்தில் பெற்றோருக்காக இளைய தலைமுறை மிக எளிதாக விட்டுக்கொடுத்து இதுவரை நாம் காதலர்கள், இனிமேல் நாம் நண்பர்கள் என்று முடிவெடுக்கிறார்கள். இதைக் கேட்கும் காத்தாடி ராமமூர்த்தி அவரது தலைமுறைக்கு ஏற்ப இந்த காலத்து இளைஞர்களைப் புரிந்துகொள்ளவே முடியாமல் தடுமாற, நாடகம் முடிகிறது. மிகவும் இயல்பான க்ளைமாக்ஸ்!

 

நான் போயிருந்த சனிக்கிழமை வயதானவர்களுக்கான சிறப்பு ஷோ போலும். இந்த இளமையான நாடகத்தைக் காணவந்திருந்தவர்களுக்கு வயது பெரும்பாலும்  60 வயதுக்கு மேல்தான்! இதைக் கண்டு என்னுடன் இருந்த இளம் நாடக ரசிகர் ஒருவர் ஏகத்துக்கு பதட்டம் ஆனார். ஆனாலும்நாடக சுவாரசியத்தில் அதை மறந்துவிட்டார். விரைவில் இதே நாடகத்தை சென்னையில் வேறொரு இடத்திலும் அரங்கேற்றப் போகிறார்களாம்! இங்கே தவறவிட்டவர்கள் அங்கே பார்த்துக் கொள்ளுங்கள்!

 

-முத்துமாறன்

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...