![]() |
பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவான யோகிபாபுPosted : சனிக்கிழமை, ஜனவரி 23 , 2021 11:18:19 IST
இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தில், நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த நிலையில் இவர் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'பொம்மை நாயகி' என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்க உள்ளார். அறிமுக இயக்குநர் ஷான் இயக்கும் இப்படத்துக்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.
|
|