???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவறிக்கைக்கு மோசடியாக பெறப்படும் ஒப்புதல் - தமுஎகச கண்டனம்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   20 , 2019  03:20:00 IST


Andhimazhai Image

தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவறிக்கைக்கு மக்களின் ஆதரவு இருப்பதாக பிம்பம் உருவாக்கப்பட்டு, மோசடி முறையில் ஒப்புதல் பெறப்படுவதாக தமுஎகச குற்றம் சாட்டியுள்ளது.

 

இதுதொடர்பாக தமுஎகச வெளியிட்ட அறிக்கை:

                        

தேசியக் கல்விக்கொள்கை 2019 வரைவறிக்கையை முழுமையாக நிராகரிக்கவேண்டும் என்பதே  தமுஎகச உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கை. இந்நிலையில் மத்திய அரசின் இந்த வரைவறிக்கைக்கு பொதுமக்களின் ஆதரவு இருப்பதாக பொய்க்கணக்குக் காட்டும் மோசடி தமிழக பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  ஆகியவற்றின் மூலமாக நடந்துவருகிறது. இதற்காக  பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ எவ்வித தகவலும் தராமல் உடன்பாடான அல்லது மாற்றுக்கருத்து சொல்லமுடியாத நிலையில் உள்ள தனியார் கல்விநிலையங்களைச் சேர்ந்தவர்களையும் கல்வித்துறை அதிகாரிகளையும்  வரவழைத்துப் பேசிவிட்டு கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியதாக கணக்குக் காட்டப்படுகிறது.

 

நேற்று கோவையில் இப்படியொரு கூட்டம் நடப்பதாக தகவலறிந்து பெரியார் திக, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கூட்டம் கலைந்தது. இன்று திருச்சியில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களையும் சில தலைமை ஆசிரியர்களையும் கொண்டு “தேசிய கல்விக்கொள்கை 2019 கருத்துக்கேட்பு பணிமனை” என்ற பெயரில் இதேபோன்ற கூட்டம் நடந்திருக்கிறது. தகவலறிந்து அங்கு சென்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் தங்களது கருத்துக்களையும் கேட்க வலியுறுத்தினர். இதையடுத்து “இது அலுவலர்களுக்கான கூட்டமே’’ என்கிற பொய்யுடன் கூட்டம் முடிந்தது. கல்வியாளர்கள் வெளிநடப்பு செய்து உண்மைநிலையை பொதுமக்களுக்கு விளக்கியுள்ளனர். 

 

 

கோவை திருச்சி போலல்லாமல், மதுரையிலும் சென்னையிலும் கருத்துக் கேட்புக்கூட்டத்தை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களை அழைத்து வெளிப்படையாக நடத்த தமுஎகச தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

 

இவ்வாறு அதில் கூறப்படுள்ளது.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...