அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநருக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   30 , 2021  10:51:41 IST

ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேலுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் ஒன்றாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “சமூகநீதி  அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து வெளியான ஜெய் பீம் திரைப்படம், தமிழக மக்களின் பரவலான ஏற்பைப்  பெற்று மிகப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ்த் திரை உலகின் நட்சத்திர நடிகரான சூர்யா அவர்கள் நடித்த ஜெய்பீம் படத்தை த.செ. ஞானவேல் அவர்கள் இயக்கியிருக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வு, மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின் துயர் சூழ்ந்த வாழ்வு ஆகியவை பற்றியது ஜெய் பீம் திரைப்படம்.

சமூக நீதி பற்றிய இந்த ஜெய் பீம் திரைப்படம்,  தமது சாதிக்கு எதிரானது எனத் தமிழகத்தில் உள்ள ஒரு சாரார், இந்தப் படத்திற்கும், இதன் இயக்குனர் த.செ. ஞானவேல் அவர்களுக்கும்,  ஜெய் பீம் படத்தைத் தயாரித்து நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள், ஒரு சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் இத்தகைய அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்பே ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் அவர்கள், தாமாகவே முன்வந்து ஆட்சேபத்திற்கு உரியது எனச் சொல்லப்படுகிற குறியீட்டுப் பிம்பத்தை அகற்றி இருக்கிறார்.

இதற்குப் பின்னும் ஜெய் பீம் படக் கலைஞர்கள், அவர்தம் குடும்பத்தினர் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள், பொது ஊடகங்களில் தொடர்ந்து பேசியும், நிர்பந்தித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்கள். வன்முறையான அழுத்தங்கள் தருவதன் மூலம் கலைஞர்களைப் பணியைச் செய்வது என்பது, எதிர்காலத்தில் இனி எந்தக் கலைஞரையும் சுதந்திரமாகப் படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவதினின்றும் முடக்கி விடும் ஆபத்துக் கொண்டது என நாங்கள் கருதுகிறோம்.

இத்தகைய போக்கு, சாதி மத பேதங்கள் கடந்த, பொதுச் சமூகத்தின் சொத்தான கலைஞர்களின் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல, குடிமைச் சமூக உரிமைகளுக்கே எதிரானது எனவும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தவிரவும் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை வலியுறுத்தி நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளன என்பதையும் இத்தருணத்தில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழகத்தின் சமூகநீதிக்கும், சமூக அமைதிக்கும் எதிரான வன்முறையைத் தூண்டும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைச் சனநாயக இயக்கத்தினர், மனித உரிமையாளர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பெண்நிலைவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்களான நாங்கள் கண்டனம் செய்கிறோம். நீதியான, சமத்துவமான, அமைதியான தமிழகத்தை விழைகிற அனைவரும் இத்தகைய வன்முறைக்கு எதிராக, எம்முடன் இணைந்து சனநாயகக் கடமையாற்ற வருமாறு கனிவுடன் அழைக்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...