???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு

Posted : வெள்ளிக்கிழமை,   மே   10 , 2019  01:10:08 IST


Andhimazhai Image
தலைசிறந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த 1997-ஆம் ஆண்டு 'சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் அவர்கள் நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என தனது படைப்பாற்றலை தமிழ் வாசகர்களுக்கு அர்பணித்திருக்கிறார்.
 
திருநெல்வேலி பேட்டை வீரபாகுநகரில் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் நல்லடக்கம் இன்று மாலை நடைபெறுகிறது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என பல்வேறு தரப்பினர் அவரக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
தோப்பில் முகமது மீரான் அவர்களுக்கு எழுத்தாளர்கள் அஞ்சலி:
 
அழகியபெரியவன்
 
நீங்கள் எழுதாமல் இருந்திருந்தால் அந்த வாழ்க்கையை வேறு யார் எழுதியிருப்பார் தோப்பில் ஐயா?
 
கண்ணீரோடு வணங்குகிறேன்.
 
கவிஞர் யுகபாரதி 
 
ஒரு சாய்வு நாற்காலியைக் காலம் சரிந்த பலகையாக்கிவிட்டது. எழுத்துக்களிலும் எழுத்துக்களாகவும் வாழ முற்பட்ட எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானை ஆழ்ந்த கண்ணீருடன் ஏக இறைவனிடம் ஒப்படைப்போம்.
 
உதயசங்கர்
 
தமிழிலக்கியத்தில் இஸ்லாமிய வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்தவர் தோப்பில் முகமது மீரான். அவருடைய முதல் நாவலே ஒரு புதிய தடத்தை உருவாக்கியது. அதன் பின்னரே பல்வேறு புதிய பாதைகள் உருவாயின. அவரை அந்தவகையில் முன்னோடி என்றும் சொல்லலாம்.
 
பாரதிநாதன்
 
சாய்வு நாற்காலி உள்ளிட்ட சிறந்த படைப்புகளை அளித்தவர். அவரது சுருட்டுப்பா சிறுகதை மறக்க இயலாதது. எழுத்தாளரின் மரணம் வருத்தத்துக்குரியது. எனினும், அவரது எழுத்து நீடுழி வாழும்.
 
கீரனூர் ஜாகிர்ராஜா
 
தனது படைப்புகளின் வழியே தமிழ் இஸ்லாம் சமூக வாழ்க்கையை விகசித்த மூத்த எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார். அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
 
கரன் கார்க்கி
 
தோப்பில் முகமது மீரான் படைப்புகளின் வழியே கடலோர சமூகத்தின் குறிப்பிட தகுந்த வாழ்வையும் கடந்த கால நிலவுடைமை சமூகத்தின் நசிவை குறித்த அவரது எழுத்துகள் என் நினைவுக்கு வருகிறது... படைப்பாளியின் மறைவு துயரத்தை தருகிறது. என் அஞ்சலி.
 
 

English Summary
Writer Thoppil muhammad meeran passes away

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...