அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ரைட்டர்: திரைப்பட விமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   25 , 2021  11:44:43 IST


Andhimazhai Image

மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கும் காவலர் ஒருவரும், படித்து முன்னேறிவிட வேண்டும் என நினைக்கும் ஆய்வு மாணவர் ஒருவரும் எதிர்பாராத சூழலில் சந்திக்க நேர்வதுதான் ரைட்டர் திரைப்படம்.   

காவல் நிலையம் ஒன்றில்  எழுத்தாளராக இருக்கும் சமுத்திரக்கனி (தங்கராஜ்)  தன்னுடைய துறையிலும் சங்கம் வேண்டும் என்பதற்காக நீண்டகாலமாகப் போராடிக் கொண்டிருப்பார். இதனால் காவல் துறை உயர் அதிகாரியால் ஏளனப்படுத்தப்பட்டு சென்னைக்கு பணி இடமாறுதல் செய்யப்படுவார். புதிய பணியிடத்திலும்  உதாசீனப்படுத்தப்படும் சமுத்திரக்கனி குற்றவாளி ஒருவனைப் பிடிப்பதற்காக 'கிரைம் சீன்'  போட்டு கொடுப்பார். இதை வைத்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கும் ஹரி கிருஷ்ணன்(தேவக்குமார்) கைது செய்யப்படுவார். பொய் வழக்கு ஒன்றில் ஹரிகுமார்  கைது செய்யப்பட்டுள்ளார், அதுவும் தான் போட்டுக்கொடுத்த திட்டத்தின் படி என தெரியவருகிறபோது சமுத்திரக்கனி என்ன செய்கிறார்? மேலும்,  சங்கம் வைப்பதற்கான  போராட்டத்தை சமுத்திரக்கனி வென்றெடுத்தாரா? இல்லையா? என்பதுதான் ரைட்டர் படத்தின் மீதி கதை.

வழக்கமான தமிழ் சினிமாவின் கதை தேர்விலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறது ரைட்டர். தலித் கிறிஸ்துவர்களின் சாதி சான்றிதழ் விவகாரம், தலித் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதில் உள்ள இடர்பாடுகள், காவல் துறையில் நிலவும் ஆதிக்க மனப்போக்கு, சாதி, என்கவுண்டர், காவல் துறையில் நிலவும்  கம்யூனிச வெறுப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் கொலை செய்யப்படுவது போன்ற பல்வேறு  பிரச்சனைகளை தன்னுடைய முதல் படத்திலேயே சமரசமின்றி பேசியிருக்கிறார் இயக்குநர் ஃப்ராங்கிளின் ஜாக்கப். இயக்குநர் ரஞ்சித்தின் பட்டறையிலிருந்து உருவானவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.  திரைக்கதையில் இயக்குநருடன் சேர்ந்து ஓவியர் சந்தோஷ் நாராயணனின் பங்களிப்பும் இருக்கிறது.

ரைட்டர் கதாபாத்திரத்தை ஏற்று  நடித்திருக்கும் சமுத்திரக்கனி நடிப்பில் அசரவைக்கிறார். ஐம்பது வயதைக் கடந்த தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தி போயிருக்கிறார். அதேபோல், மாணவராக  நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன் பதட்டமான காட்சிகளில் இரக்கம் கொள்ள வைக்கிறார். சுப்ரமணிய சிவாவின் பரிதவிப்பான நடிப்பு மனதை உலுக்குகிறது. கவிதா பாரதி, போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர், இனியா,மகேஸ்வரி என திரையில் தோன்றும் ஒவ்வொருவரும் அவர்களின் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார்கள். படத்திற்கு நடிகர்கள் தேர்வு பெரும் பலம்.  

திருவெறும்பூர், திருக்காட்டுப்பள்ளி, பூண்டி,  சென்னை போன்ற பகுதிகளைத் தனது காமிராவால் அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரதீப் காளிராஜா. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு வலுசேர்த்திருக்கிறது. பாடலில் கவனம் செலுத்தியிருக்கலாமோ என தோன்றுகிறது. படத்தின் கதை கணிக்கக் கூடியதாக இருந்தாலும், அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் படத்தைத் தொகுத்திருக்கிறார் மணிகண்டன்.

"படிச்சா மேல தெருவுக்கு போகமுடியுமானு தெரியல. ஆனா மேல வந்துடுடலாம்", "போலீஸ்ல அதிகாரத்தில் இல்லாத எல்லாரும் அடியாளு தான்" என படத்தின் வசனங்கள் கூர்மையாக உள்ளன.

விசாரணை, ஜெய்பீம் படங்களின் வரிசையில் காவல் துறையின் மனித உரிமை மீறலையும், சாதி ஆணவப்போக்கையும் எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளது ரைட்டர் திரைப்படம்.       

 

தா.பிரகாஷ்
  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...