???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வைரமுத்துவுக்கு ஞானபீடமா ? – ஜெயமோகன்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   29 , 2017  02:28:16 IST


Andhimazhai Image

எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் ஞானபீட விருது குறித்தும் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டால் எழப்போகும் அதன் தாக்கம் குறித்தும் எழுதியுள்ளார்.

 

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன்.. பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக  படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார்.

 

மோடி எதிர்ப்பில் அன்றாடம் குமுறும் நம் ஊடகங்கள்,அறிவுஜீவிகள்கூட இச்செயல்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் அடக்கியேவாசித்தன. ஆகவே ஐயம் உறுதியாகிறது. இது வெறும் வதந்தியாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சிறுமைகளில் ஒன்றாக இது இருக்கும். வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின் முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்துகள் செயற்கையாக செய்யப்பட்டவை.

 

ஞானபீடம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான மூத்தபடைப்பாளிகளுக்கே இங்கு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. பிற இந்தியமொழிகளில் அவ்விருதைப்பெற்றவர்களின் பெரும்பாலானவர்கள் இந்திய இலக்கிய மேதைகள். அவ்வரிசையில் வைரமுத்து தமிழின் பிரதிநிதியாக வைக்கப்படுவாரென்றால் அது தமிழிலக்கியச்சூழலை சிறுமைசெய்வதாகவே அமையும். 

 

இது ஓர் அமைப்பு ஒருவருக்கு விருது அளிக்கிறது என்னும் தனிநிகழ்வு அல்ல. சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார். ஆகவே இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய முயற்சி.

 

வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு.   இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், அதன்பொருட்டு கருத்துத்தெரிவிக்கும் துணிவுமுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி ஞானபீட அமைப்பின் செயலருக்கு அனுப்பவேண்டும். அதிகார விளையாட்டுக்களை இலக்கியம் எளிதில் கடக்க முடியாது. ஆனால் தமிழிலக்கியச்சூழலின் எதிர்ப்பை மீறியே இவ்விருது அளிக்கப்பட்டது என்பதைப் பதிவுசெய்வோம். இத்தருணம் கடந்தால் நம் தலைமுறைகள் முன் சிறுமையுடன் நின்றிருப்போம்.

 

 

வேறுவழியில்லாமல் என் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன். இவ்விருது அளிக்கப்பட்டால்கூட தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழல் அந்தரங்கமாக முணுமுணுத்துக்கொள்ளுமே ஒழிய வாய்திறந்து எதிர்ப்பைப் பதிவு செய்யப்போவதில்லை.  

 

[எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம். நன்றி : திரு. ஜெயமோகன்.]



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...