உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளகளை சந்தித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது, உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வாங்கித் தந்திருக்கிறார்.
பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் இந்த போட்டிகள் நடத்தப்படும். அதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றார்.