???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை

Posted : புதன்கிழமை,   ஜுன்   20 , 2018  00:20:53 IST

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ’எச்’ பிரிவில் கொலம்பியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் அடித்த பந்தை கொலம்பிய வீரர் கார்லஸ் சான்செஸ் மொரேனோ தடுக்க முயன்றபோது ஃப்வுல் ஆனதால் சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால் கொலம்பிய அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஷின்ஜி கவாஜா கோலாக மாற்றினார். இதனால் 6-வது நிமிடத்திலேயே ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது. எனினும் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கொலம்பிய அணியின் ஜுயான் பெர்னாண்டோ குயின்டோரோ கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேரத்தில் இரு அணிகளும் தலா 1 கோல்களுடன் 1-1 என சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் யுவா ஓசாகா ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-1 என வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணி தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணியை தோற்கடித்ததே கிடையாது. முதன்முறையாக கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...