அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உலகக் கோப்பை கால்பந்து : நாக் அவுட் சுற்றில் சாதிக்கப்போவது யார்?

Posted : சனிக்கிழமை,   ஜுன்   30 , 2018  21:45:52 IST


Andhimazhai Image

கடந்த ஜூன் மாதம்  14-ம் தேதி தொடங்கிய 21வது உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் பிரிவின் முடிவில் 16 அணிகள் நாக் அவுட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் நிகழ்ந்த பெரும் அதிர்ச்சி என்றால் நடப்பு சாம்பியனான ஜெர்மன் அணி நாக் அவுட் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியதுதான்.


கால்பந்து ஆட்டத்தைப் பொறுத்தவரை ஜெர்மன் அணி என்பது முரட்டுக் குதிரை மாதிரி. அடக்குவது என்பது மிகக் கடினம். ஆனால் இந்த உலகக்கோப்பை தொடரில் முரட்டுக் குதிரை முதல்
சுற்றைக்கூட தாண்டவில்லை என்பது கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் சோகமான செய்தி என்பதில் சந்தேகமில்லை. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக
நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. 1998-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ், 2002-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. கடந்த 2006-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, 2010-ஆம் ஆண்டு முதல் சுற்றிலேயே வெளியேறியது. 2010-ம் ஆண்டு கோப்பையை வென்ற ஸ்பெயின், 2014-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2014-ஆம் ஆண்டு கோப்பை வென்ற ஜெர்மனி, இந்தாண்டு முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெறவில்லை என்பது இன்னும் கூடுதல் சோகம்தான்.


லீக் போட்டிகளின் முடிவில், ‘ஏ’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘பி’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘டி’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, ‘ஈ’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘எஃப்’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘ஜி’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘எச்’ பிரிவில் இருந்து  கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.இதன்மூலம் முன்னாள் உலக சாம்பியன்களான பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய ஆறு அணிகள் இந்த முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகளைப் பற்றிய சிறு அறிமுகம் இதோ..பிரேசில்:  கடந்த முறை ஜெர்மனியிடம் அரையிறுதிப் போட்டியில் காட்டடி வாங்கிய பிரேசில் இந்த முறை கோப்பையை வென்று அந்தக் களங்கத்தை போக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த முறையும் நட்சத்திர வீரர் நெய்மரை அதிகம் நம்பியிருந்தாலும் அணியில் தியாகோ ஸில்வா, ஃபிலிப் லூயிஸ், கேஸ்மிரோ, ரெனாட்டோ ஆகஸ்டோ, ஃபிலிப் கவுட்டின்ஹோ, ஃபவுலின்ஹோ, ஃபெர்னான்டின்ஹோ, வில்லியன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளார்கள். இதுவரை ஐந்துமுறை கோப்பையை வென்றுள்ள பிரேசில் அணி ஆறாவது முறை கோப்பையை
வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.ஸ்பெயின்:  கடந்த 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில், இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக
உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின் அணி. இதன்மூலம், ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே, முதன் முதலாக உலகக் கோப்பையை வென்ற ஐரோப்பிய அணி என்ற பெருமையை பெற்றது ஸ்பெயின். 2008ல் யூரோ கோப்பை, 2010ல் உலகக் கோப்பை, 2012ல் மீண்டும் யூரோ கோப்பை என கால்பந்து உலகில் சாம்ராஜ்யம் நடத்திய ஸ்பெயின் அதன்பிறகு 2014ல் நடந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறி கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், தற்போது 2018 உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்று, மீண்டும் கோப்பையை வெல்ல எதிர்நோக்கியுள்ளது. அணியின் கேப்டன் செர்ஜியோ ராமோஸ், ஆந்த்ரே இனியஸ்டா, டேவிட் சில்வா, ரோட்ரிகோ மொரேனோ, தியாகோ கோஸ்டா, ஜோர்டி ஆல்பா, ஜெரார்டு பிக்யூ உள்ளிட்டோர் அணிக்கு பக்கபலமாக திகழ்கிறார்கள். இந்த முறை லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, எனினும் நாக் அவுட் சுற்றில் அந்த அணி வீறுகொண்டு எழும் என நம்பலாம்.


பிரான்ஸ்:  ஐரோப்பிய அணிகளில் சிறந்த அணிகளுள் ஒன்றான பிரான்ஸ் 1998ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் டெஸ்சேம்ப்ஸ் தலைமையில், ஸினடைன் ஜிடேனின் உதவியோடு முதன் முதலாக தனது உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இத்தாலியிடம் 5-3 என்ற கணக்கில் பரிதாபமாக
தோற்றுப்போனது. இந்த முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்த அணியில் பவுல் போக்பா, என்-கோலோ கன்டே, ஆண்டோய்ன் க்ரீஸ்மேன், ஸ்டீவென் சோன்சி, ஒலிவியர் கிரவுட்,
கைலியன் பேப் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் எனில் காலிறுதிக்கு முன்னேறும். இரண்டாவது முறையாக பிரான்ஸ் அணி கோப்பையை வெல்லவும்கூடும்.  


இங்கிலாந்து:  கடந்த 1966-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.1990ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது.
அதன்பின் உலகக்கோப்பையில் அந்த அணியின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதுதான் உண்மை. இந்த உலகக் கோப்பையில் அனுபவம் இல்லாவிட்டாலும் மிகச்சிறந்த
இளம் வீரர்களைக் கொண்டுள்ளது இங்கிலாந்து அணி. 24 வயதான கேப்டன் ஹேரி இதுவரை, 23 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார். ரஹீம் ஸ்டெர்லிங், மார்க்ஸ் ராஷ்ஃபோர்ட், ஜான் ஸ்டோன்ஸ், கீரன் டிப்பர், ஜெஸ்ஸி லிங்கார்ட் போன்ற இளம் வீரர்கள் திறமையாக ஆடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இளம்படை ரஷ்யாவில்
சாதிக்கும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் நம்பிக்கை கீரத் சவுத் கேட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   அர்ஜெண்டினா:  உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை பொறுத்தவரை, இதுவரை ஐந்துமுறை அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 1978 மற்றும் 1990 ஆம்
ஆண்டுகளில் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணி கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்து கோப்பையை கோட்டைவிட்டது.
தற்போது மீண்டும் மெஸ்ஸி தலைமையில் உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையோடு களமிறங்கியுள்ள அர்ஜெண்டினா ஏஞ்சல் டி மரியா, ஜேவியர் மேஷ்கரேனோ,
மானுவேல் லான்சினி, கோன்சாலோ ஹிகுவேன், செர்ஜியோ அகுரோ, பாலோ டைபலா போன்ற திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. லியோனல் மெஸ்சியின் மேஜிக் எடுபட்டால்
அர்ஜெண்டினா இந்த முறை கோப்பையை வெல்லக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.உருகுவே:  உருகுவே அணி 1930 மற்றும் 1950ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது,. அதன்பின் அந்த அணியின் சிறந்த ஆட்டம் என்றால் 2010ஆம் ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்ததைச் சொல்லலாம். ’ஏ’ பிரிவில் இடம்பெற்ற உருகுவே மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எடின்சன் கவானி, லூயிஸ் சௌரேஸ், டெனி ஷெரிஷேவ், போன்ற வீரர்களின் ஆட்டம் அந்த அணிக்கு பெரிய பலம். கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று கூறமுடியாவிட்டாலும் கால்பந்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் உருகுவேயை சாதாரணமாக கணிக்க இயலாது.   


போர்ச்சுகல்: போர்ச்சுகல் அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. கடந்த 2002 ஆண்டு முதல் நடப்பு 2018 உலகக் கோப்பை வரை தொடர்ச்சியாக, அனைத்து உலகக் கோப்பை தொடரிலும் தவறாமல் போர்ச்சுகல் அணி விளையடிவந்தாலும் 2006 உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தததைத்தான் முக்கிய சாதனையாக சொல்லமுடியும். ஆனால் இந்த முறை
அந்த அணி கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. காரணம் கிரிஸ்டியானோ ரொனால்டோ. உலகக் கால்பந்து வீர்ர்களில் இவர் முன்னணி வீரர். அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரரும் கூட. சர்வதேச கால்பந்து போட்டிகளில் 81 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருப்பது ரொனால்டோ தான். ஆனால் ஒருவரை மட்டுமே நம்பி இருக்காமல் அணியாக விளையாடினால் சாதிக்க வாய்ப்பு உள்ளது. ரொனால்டோவின் கோப்பைக் கனவு நிறைவேறுமா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.  

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...