அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்பிக்கு நீதிமன்ற காவல்!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   11 , 2021  16:41:50 IST

திமுக எம்.பி.ரமேஷூக்கு வருகின்ற அக்டோபர்-13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் மரணம் தொடர்பாக எம்பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகிய ஐந்து பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


“நான் உயிரினும் போற்றும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”என்று சரணடைந்தது குறித்து எம்பி ரமேஷ் கடிதம் வாயிலாக விளக்கம் அளித்திருந்தார்.


இந்நிலையில், முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் எம்பி ரமேஷூ வருகின்ற 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து  பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...