அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வொண்டர் வுமன் 1984 : திரைவிமர்சனம்

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   26 , 2020  20:06:01 IST


Andhimazhai Image

டிசி காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு 2017 ஆம் ஆண்டு ’வொண்டர் வுமன்’ திரைப்படம் வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ‘வொண்டர் வுமன் 1984’ வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் யுத்தத்தின் பொருட்டு வெளியுலகிற்கு வரும் டயானா, ஸ்டீவ் (டயானாவின் காதலன்) இறந்தவுடன் அமேஸானியன்கள் வசிக்கும் தீவிற்கு திரும்பாமல் அங்கேயே தங்கிவிடுகிறாள். 1984 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் இக்கதையில்  டயானா ஸ்மித்சோனியன் நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். அந்த இடத்திற்கு அதிசய சக்தி வாய்ந்த ஒரு கல் வருகிறது.

அந்த கல்லின் அதிசய சக்தி பற்றி தெரிந்து கொள்ளும் மேக்ஸ்வெல் லார்டு அதை கைப்பற்றி தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள செய்யும் செயல்களால் உலகம் அழிவை நோக்கிச் செல்கிறது. உலகத்தை அழிவிலிருந்து டயானா எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை.

கதைக்களத்தின் காலக்கட்டத்திற்கு ஏற்ப உடைகள், வாகனங்கள், தொழில்நுட்பங்கள் என அனைத்திலும் நுட்பமாக கவனித்து காட்சிபடுத்தியுள்ளனர். ஆனால், திரைக்கதையும் 80-களில் வெளிவந்த கதையை போலவே சற்று சலிப்புடன் பழைய கதையாக நகர்கிறது. முதல் பாதி, கதையைச் சொல்லி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி வேகமெடுக்கிறது.

சூப்பர் ஹீரோ படங்களை பொறுத்தமட்டில் சண்டை காட்சிகளுக்கு பிரதான முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.  ஆனால் ‘வொண்டர் வுமன் 1984’ படத்தில் சண்டைக் காட்சிகள் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. ஆக்‌ஷன் பின்னணியைத் தாண்டி ஸ்டீவ் – டயானா கதாபாத்திரங்களின் வழியே படத்தை உணர்ச்சிகரமாக நகர்த்த முயற்சித்துள்ளனர். க்ளைமாக்ஸில் முழு சக்தியுடன் மீண்டு வரும் டயானா, தன் சக்திகளை பெருக்கிக் கொண்ட பார்பராவுடன் மோதும் காட்சி இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

மேக்ஸ்வெல் லார்டு கட்டுப்படுத்த முடியாத சக்தியுடன் நிற்கும் போது, வசனங்கள் மட்டுமே பேசி ‘வொண்டர் வுமன்’ சாதித்து விடுகிறார். உலகத்தை காப்பாற்றி விடுகிறார். உண்மையாக இருக்க வேண்டும் ஆசைகளை துறக்க வேண்டும் என போதனை செய்தே அதிசய கல்லின் சக்தியிலிருந்து மக்களை காப்பாற்றி விடுகிறார். இதற்கு தான் படத்தின் ஆரம்பத்திலேயே உண்மை தான் பெரிய பலம் என்ற கருத்துக் காட்சியை வைத்தார்கள் போல.

பார்பரா, மேக்ஸ்வெல் கதாபாத்திரங்கள் ’க்ரீன் லேண்டன்’ படத்தின் ஹெக்டர் கதாபாத்திரத்துடன் ஒத்துப் போகிறது.  ஒரு தீய சக்தி பலகீனமான மனிதனுக்குள் புகுந்து அதன் மூலம் உலகை அழிக்கும், இது இரண்டு படத்திலும் இருக்கும் ஒற்றுமை. அதில் ’ஹெக்டர்’ பாரலாக்ஸூடன்  ஒன்றி தீய சக்தியாக மாறுவது போல இதில் பார்பரா, மேக்ஸ்வெல் அதிசய கல்லின் சக்திக்கு அடிமையாகின்றனர்.
 
மொத்தத்தில்  ‘வொண்டர் வுமன்’ (2017) படத்தை ஒப்பிடும் பொது ‘வொண்டர் வுமன் 1984’ டிசி காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றம் தான். இருந்தாலும் சாகச பிரியர்களுக்கு பிடித்த படம் தான்.

 

- கார்த்திக் சுந்தர் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...