???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்! 0 ஜெயலலிதா சகிச்சையின் போது உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடி: அப்பல்லோ தகவல் 0 சபரிமலையில் 22- ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு 0 செய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   06 , 2018  21:18:48 IST

சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், சென்னையில் பெண்கள் விடுதிகளை நடத்துபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் விடுதி உரிமையாளர் சஞ்சிவ் கைது செய்யப்பட்டார்.
 
இதனையடுத்து தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
பெண்கள் விடுதி நடத்தி வருபவர்கள் தீயணைப்பு, காவல்துறை, மாநகராட்சி, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை உரிமங்களை பெற வேண்டும். மேலும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்த உரிமங்களைக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து அத்தாட்சியைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ததற்கான சான்றினை விடுதிகளின் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
விடுதிகளில் ரகசிய கேமராக்களை கண்டறிய Hidden Camera Detector போன்ற செயலிகள் மூலம் கண்காணித்து புகார்கள் அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 31ம் தேதிக்குப் பின்னரும் பதிவு செய்யப்படாத விடுதிகள் குறித்து புகார்கள் இருந்தால், மாவட்ட ஆட்சியரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 9444841072 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம்.
 
டிசம்பர் 31-ம் தேதிக்குப் பின்னர், அது வரை பதிவு பெற்ற விடுதிகளின் பெயர்ப்பட்டியல் முகவரியுடன் மாவட்ட இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
 
டிசம்பர் 31-ம் தேதிக்கு பின்னரும் உரிமம் இன்றி விடுதி நடத்தினால், அதன் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை உள்ளது என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் பெண்கள் விடுதியில் காப்பாளராக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும். சிறுவயது குழந்தைகள் மற்றும் பெண்களை வீட்டிற்கு அனுப்பும் போது பெற்றோர் மற்றும் பாதுகாவலருடன்தான் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கும் விடுதி, மற்றும் காப்பகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் அவசர காரணம் ஏதும் இன்றி ஆண் காவலர்கள் விடுதி வளாகத்திற்குள் செல்லக் கூடாது உள்ளிட்ட 15 வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...