???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏன் பெண்கள் தினம் கொண்டாடுகிறோம்?

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   08 , 2018  09:47:08 IST


Andhimazhai Image
இன்று சர்வதேச பெண்கள் தினம். பெண்கள் தினம் வணிகமயமாகி எந்த காரணத்துக்காக கொண்டாடப்பட்டதோ அதன் நோக்கங்கள் சிதைவைக் கண்டு வருகின்றன. இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன? பெண் சுதந்திரம் என்பது எது? பெண்ணிய செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட கருத்துகள் சில இங்கே:
 
எழுத்தாளர் மாலதி மைத்ரி:
 
பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் கிடைத்துவிட்டால் பெண் விடுதலை சாத்தியமாகிவிடுமென்ற தவறான புரிதல் சிலரால் பெண்ணியமாக முன்வைக்கப்படுகிறது. தனது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமை பிரச்சனையென்றால் பிரியும் உரிமை வேறொரு இணையுடன் வாழும் உரிமை என்ற சுற்றுத்தளத்துடன் இப்பேச்சு முடிவடைந்துவிடுகின்றன.
 
இவர்கள் எப்படி அரைகுறைகளோ இதற்கு இமியளவும் மாற்று குறையாது ஆண்களும் பெண்ணியமென்றால் இவைதான் என பிடித்துக்கொண்டு பெண்ணியம் பேசும் பெண்கள் பரத்தைகள் ஆண்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பிழைப்புவாதிகளென மார்க்சிஸ்டென அடையாளப்படுத்திக்கொள்ளும் சிலரும் அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து உளறித் திரிகிறார்கள்.
 
ஆணாதிக்கக் கட்டமைப்புக்குள் இயங்கும் கூலி வேலை செய்யும் பெண்ணிலிருந்து ஆட்சியாளராக பணி புரியும் பெண்கள் வரை பணித்தளங்களில் பாலியல் சுரண்டலுக்கும் உழைப்பு சுரண்டலுக்கும் ஆளாக்கப்படும் அரசியலும் அதற்கு பலியாகும் அரசியலும் பேசப்படாமல் அயோக்கியத்தனமாக நகர்ந்துவிடுகிறார்கள். சமூக காரணிகளை புறக்கணித்துவிட்டு பொருளீயில் தத்துவார்த்த தளத்தில் அணுகி வர்க்க விடுதலை வந்தால் எல்லாவித ஒடுக்குமுறையும் மாயமாகிவிடும் என்கிறார்கள். இந்த அமைப்புக்குள் நீடித்திருக்க அமைதியாக கடந்து பெண்கள் சிலதை இழக்க வேண்டுமென்பது எழுதப்படாத சட்டம். அவள் நீதி தேடுதலென்பது அவள் கழுத்தை அவளே சுருக்கிட்டுக்கொள்வதென்பது.
 
பணியிட சூழலில் சில பெண்கள் துணிந்து வெற்றிகரமாக சுயாதீன தொழிலாளர்களாக தொழில் முனைபவர்களாக சில மாற்றுகளும் உதாரணங்களும் உண்டு என்றாலும் இவர்கள் குடும்பம் என்ற அமைப்புக்குள் உணர்ச்சிகர அடிமைகளாக சிக்கியிருக்கிறார்கள். குடும்ப உழைப்பை முற்றிலும் முதுகில் மிக பெருமையாக மகிழ்ச்சியாக ஏற்றிருக்கும் நவீன ஹெர்குலஸ் இவர்கள். குடியிருக்கும் வீடு கூட இவர்கள் பெயரில் இருக்காது என்பதுதான் அவலம்.
 
ஒரு சராசரியான குடும்ப பெண்ணே உழைப்புச் சுரண்டலுக்கு தன் குடும்பத்தால் உள்ளாக்கப்படுகிறாள் என்று பேசும் நாம். பல்முனை திறமையாளரான நாம் குடும்பத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு பலியிட்டுக் கொள்வதை நமது திறமையென பெருமிதமடைய முடியுமா?
 
எவ்வளவு இறுக்கமான அடிப்படைவாத சமூகத்திற்குள்ளும் காலாங்காலமாக பெண்கள் பாலியல் சுதந்திரத்தை இலைமறை காய்மறையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை வெளிப்படையாகவும் மரபார்ந்த பெண்கள் செய்திருக்கிறார்கள். நவீன பெண்கள் பாலியல் சுதந்திரத்தை மட்டுமே பெண்விடுதலையின் நோக்கமாக முன்னிருத்தும் அரசியல் பெண்விடுதலையின் ஒரு இழை மட்டுமே. இழையைப் பிடித்துக் கொண்டு காட்டாற்று வெள்ளத்தை கடந்துவிட நினைக்கிறார்கள்.
 
என் தோழி ஒருவர் சுதந்திரமான செயற்பாட்டாளர். கணவன் மனைவி இருவரும் வேலை செய்கிறார்கள். இரண்டு குழந்தைகள். வீட்டு வேலைக்கு எப்போதும் ஒரு பணிப்பெண் உண்டு.
கணவன் மனைவி இருவருக்கும் சமைக்க தெரியும். கணவன் எப்போதாவது விருந்துக்கு சமைப்பார் மற்றும் மீன் கறி சுத்தப்படுத்திக் கொடுப்பார். தின சமையல் மனைவியின் பொறுப்பு. மனைவி ஒருமுறை சில மாதங்கள் வெளிநாட்டுப் பணிக்காகச் சென்றார். வீட்டுக்கு சமையலுக்கும் கூடுதலாக ஆள் நியமித்துவிட்டுப் போனார். மறுமுறை கணவர் பணி நிமித்தமாக சில ஆண்டுகள் வெளிநாடுச் சென்றிருந்தார். வீட்டில் எந்த பணியாளரையும் வைத்துக்கொள்ளவில்லை இவர்.
 
அலுவலக வேலையும் பார்த்துக்கொண்டு வீட்டு பொறுப்பையும் கவனிக்க சிரமமாயில்லையாயென கேட்டேன். அவர் இருக்கும்போது தினமும் பத்து முறையாவது டீ கேட்பார், மூலைக்கு மூலை டீ கப், சிகரெட் ஆஸ்ட்ரே, போட்டத் துணிகள் எல்லாம் அப்படியே கிடக்கும், அதைக் காணோம் இதைக் காணோமென தேடியெடுத்து குழந்தை மாதிரி தினமும் அலுவலகத்துக்கு அனுப்பும் வேலை பெரிய வேலை, இப்போ அந்த தொல்லையில்லை என்றார்.
 
நீங்கள் யாராக இருந்தாலும் உங்களை புரிந்து(???) கொண்ட ஒரு ஆணுக்கு காலம் முழுதும் பணிவிடை செய்தல் அன்புயென சொன்னால் நீங்கள் அடைந்த பாலியல் சுதந்திரம் பரிதாபத்தையே அளிக்கிறது.
 
மரபார்ந்த சமூகக் கட்டமைப்புக்குள்ளிலிருந்து வந்த பாட்டிமார்கள் அம்மாமார்கள் இதைவிட சுதந்திரமாக வாழ்ந்ததை நான் கண்டிருக்கிறேன். 
 
எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி:
 
 உழைக்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாய் உருவான மகளிர் தினம் முழுக்க முழுக்க உழைக்கும் பெண்களுக்கானது.
 
அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்கும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களின் கொள்ளைக்கும் பல்வேறு விதமான பண்டங்களின் விற்பனைக்கும் கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்கும் என உருவாக்கப்பட்டதல்ல. மகளிர் தினம் அனுசரிக்கப்பட வேண்டியது. பெண்களின் பிரச்சனைகள் பற்றி பேசவும், அவற்றைத் தீர்ப்பதற்கான உருப்படியான கருத்துகளைப் பகிரவும் பெண்கள் முன்னேறம் வேண்டும் சட்டங்கள் உருவாக்கவும் அதில் கவனம் குவிக்கவும் மட்டுமே மகளிர்தினம்.
ஆண் பெண் சமத்துவம் அதில் முதன்மையானது.
 
ஆவணப்பட இயக்குநர் பிரசன்னா ராமஸ்வாமி:
 
உடலுழைப்பு நடக்கும் எல்லாத் துறைகளிலும், உப்பளம் முதல் கட்டுமானம் வரை எல்லாவற்றிலும் இன்றைக்கும் பெண் தொழிலாளிகளின் கூலி அதே வேலைக்கு ஆணுக்கு அளிப்பதைக் காட்டிலும் குறைவாகவே கொடுக்கப்படுகிறது. அவள் வீட்டிலும் அவள் மட்டுமே உழைக்கிறாள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...