???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜோலி செய்த ஆறுகொலைகள்: கேரளத்தை உலுக்கும் கிரைம் விசாரணை!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   15 , 2019  06:47:57 IST


Andhimazhai Image
கேரள ஊடகங்கள் அனைத்தும் சில நாட்களாக ஜோலி என்ற பெயரை உச்சரித்துக்கொண்டுள்ளன. கூடத்தாயி கொலை வழக்கு என்று புகழ்பெற்றுவிட்டது இந்த ஜோலி என்ற பெண் செய்த தொடர் கொலைகள் சம்பவம்.
 
 
 
கேரளத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் இருப்பது கூடத்தாயி கிராமம். இங்குள்ள ஜோலி ஜோசப் என்ற பெண் தொடர்ச்சியாக ஆறு கொலைகளைச் செய்துள்ளார். இது கடந்த பதினெட்டு ஆண்டுகளில் நடந்துள்ளது. இவரால் கொல்லப்பட்ட அனைவரும் அவருடைய சொந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே. இதனால்தான் இந்த கொலை வழக்கு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
 
 
47 வயதான ஜோலி ஜோசப் முதலில் தனது மாமியார் அன்னம்மா தாமஸை 2002ஆம் ஆண்டு உணவில் சையனைடு கலந்து கொன்றார். இதைத்தொடர்ந்து மாமனார் டாம் தாமஸ், கணவர் ராய் தாமஸ், மாமியாரின் தம்பி மாத்யூ, கணவரின் தம்பியின் மனைவி சில்லி மற்றும் அவரது மகன் அல்பைன் ஆகியோரை வரிசையாக சில ஆண்டுகள் கால இடைவேளைவிட்டு கொலை செய்துள்ளார்.
 
 
 
ஒவ்வொருமுறையும் கொலை நடக்கும்போது மரணமடைபவர்கள் வாயில் நுரைத்தள்ளி இறந்துள்ளனர். முதல் மூன்று கொலைகள் அவர் செய்தபோதும்கூட அவர் மீது உறவினர்களுக்கோ அல்லது பக்கத்து வீட்டுக்கார்களுக்கோ சந்தேகம் வரவில்லை. ஜோலியின் கணவர் ராய் தாமஸ் மரணத்தை பற்றி மற்றவர்கள் கேட்டபோது, அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறியுள்ளார். 
 
 
 
ஆனால் ராய் தாமஸின் மாமா மாத்யூ, பிரேதபரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். அப்படி பரிசோதனை செய்யப்பட்டபோது ராய் தாம்ஸின் உடலில் சயனைடு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் ராய் தாமஸுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் ஜோலி பொய் கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினரும் இது தற்கொலை என்று நம்பினர்.
 
 
 
ஆனால் ராய் தாமஸுடைய தம்பியின் குழந்தை மற்றும் மனைவி மரணங்கள்தான் ஜோலியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத்தொடர்ந்து ராய் தாமஸின் சகோதரர் பாவா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம்  மூலம் போஸ் மார்ட்டம் ரிபோர்ட்டுகளை பெற்றார்.  இதன் மூலம் நடத்திய விசாரணையில் ஜோலிதான் இந்த 6 கொலைகளை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
 
ஜோலி படித்தது பிகாம். ஆனால் பொறியியல் படித்ததாகவும் கோழிக்கோடு என் ஐ டி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிவதாகவும் அனைவரையும் நம்ப வைத்துள்ளார். என் ஐ டி நிறுவனம் இவர் இங்கு பணிபுரியவே இல்லை. அவர் அடையாள அட்டை போலியானது என்று மறுத்துவிட்டது.
 
 
 
ஜோலி தன் முதல் கணவரான ராய் தாமசை காதலித்து மணந்திருக்கிறார் இன்னும் ஒரு அதிர்ச்சியூட்டும்தகவல். இரண்டாவது கணவரான ஷாஜு,’ என் மனைவி இறந்த இரண்டு மாதத்திலேயே நாம் இரு வரும் மணந்துகொள்ளலாம் என ஜோலி கேட்டார். நான் ஓராண்டு முடிந்தபிறகு மணந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன். இந்த  கொலைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று சொல்கிறார்.
 
 
 
சொத்தை இவர் பேருக்கு மாற்ற வேண்டும் என்பதால்தான் இவர் இந்த கொலைகளை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.  ஜோலி எலிகளுக்கு வைக்கவேண்டும் என்று சையனடு வாங்கி உள்ளார். அவருக்கு சையனைடு அளித்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ராய்தாமஸின் உடல் ப்ரேத பரிசீலனையில் சையனைடு கிடைத்ததுபோல் இறந்துபோன பிற உடல்களிலும் சையனைடு கிடைக்குமா என்று காவல்துறை இனி ஆராய வேண்டும். இந்த கொலையை ஐயமின்றி நிரூபிக்க கேரள காவல்துறை பாடுபட வேண்டி இருக்கும்.
 
 
 
ஆனால் கேரள சமூகம் ஜோலிக்கு இப்போதே விசாரணையின்போதே தண்டனையை வழங்கிவிட்டது. ஜோலி ஏதாவது ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் இந்த கொலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பது பொதுவான கணிப்பு. ஒரு பெண் செய்திருப்பதால் சமூகத்தில் ஒரு ஆர்வத்தை இது கிளறிவிட்டுள்ளது.
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...