???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரசவத்திற்கு 9 நாட்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த பெண்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   18 , 2019  06:26:39 IST


Andhimazhai Image

இப்போதெல்லாம் கர்ப்பமான ஒரு மாதத்திலேயே அதை உறுதி செய்துவிடுகிறார்கள். ஆனால் பாருங்கள் வளர்ந்த நாடான அமெரிக்காவில் ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று கண்டு பிடித்தது எப்போது தெரியுமா? நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது. கண்டு பிடித்த எட்டுநாளில் மொழுக் மொழுக் என்று குழந்தை மூன்று கிலோ எடையுடன் பிறந்தே விட்டது.

 

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் உள்ள மெம்பிஸ் நகரத்தில்  லாரன் மற்றும் கேத்தி சால்க் தம்பதி வசித்து வருகின்றனர். பல வருடங்களாக இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இருவரும் மனம் உடைந்துபோய்விட்டனர். 28 வயதாகும் லாரன் இருமுறை கருவுற்றார். ஆனால் இருமுறையும் கருச்சிதைவு ஏற்பட்டதால் குழந்தை பிறக்கவில்லை.

 

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் லாரனுடைய தாய் வசித்து வருகிறார். அவரைப்பார்க்க லாரன் சென்றபோது, லாரனின் தோற்றத்தில் வித்தியாசம் இருக்கிறது என்பதை அவரது தாய் உணர்ந்தார். இதனால் லாரன் கர்ப்பமாக இருக்கிறாரா ? என்பதை கண்டறிய பரிசோதனை செய்யச்சொன்னார். ஐந்தாறு மாதம் இருக்கலாமென்று அவருக்குச் சந்தேகம்.

 

ஆனால் லாரன் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டபோது, அவருக்கு ரத்தப்போக்கு தொடங்கிவிட்டிருந்தது. இதனால் மருத்துவரை உடனே சென்று  பார்த்தார் லாரன். இதைத்தொடர்ந்து மருத்துவர் ஸ்கேன் செய்தபோது,  முழுவதுமாக வளர்ந்த குழந்தை தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. 3 கிலோ எடையில் அழகிய குழந்தை பிறந்தது.

 

என்னப்பா இது... லேட்டா இருக்கலாம்.. ஆனால் இவ்வளவு லேட்டாக இருக்கலாமா என்று  அவரது கணவர் கேத்தியிடம் கேட்டபோது ‘ இது கடவுளின் திட்டம் என்றுதான் தோன்றுகிறது’ என்கிறார். நல்லா திட்டம் போட்டாருய்யா கடவுள்!

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...