???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரள திரையுலகில் பெண்களின் அவலம்: விசாரணை அறிக்கை

Posted : புதன்கிழமை,   ஜனவரி   01 , 2020  23:20:43 IST

நடிகைகளுக்காக போராடும் நோக்கத்தில் மலையாள பட உலகை சேர்ந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து டபிள்யு.சி.சி. என்ற அமைப்பை 2017-ம் ஆண்டு தொடங்கினர். இந்த அமைப்பினர், மலையாள பட உலகில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநியாயங்கள் பற்றியும், அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தனர்.

அதன்பேரில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, நீதிபதி கே.ஹேமா கமிஷனை அமைத்தது. இந்த கமிஷனில் முதுபெரும் நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வல்சலா குமாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த கமிஷன், தனது அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்தது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் கசிந்துள்ளன.

மரியாதைக்குரிய இடத்தை சினிமா உலகில் பிடிக்க வேண்டுமானால், மிகவும் மோசமான அனுபவங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டி உள்ளது என பலர் வேதனையுடன் கூறி உள்ளனர். இதில் பாதிக்கப்படுகிற நடிகைகள், போலீசில் புகார் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பட உலகில் உள்ள பல ஆண்களும், பெண்களும் இந்த விவகாரம் பற்றி பேசும்போது வெறுப்புணர்வை வெளிப்படுத்தி உள்ளனர். இன்னும் சிலர் பயத்தின் காரணமாக பேசவே மறுத்து விட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளின் தனிமனித உரிமைகள் மீறப்படுகின்றன; கழிவறை, உடை மாற்றும் அறை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என்றும் புகார் கூறி உள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...