???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை 0 போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது 0 வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு 0 தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

“கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கலாமா?”-மகளிர் மருத்துவம்-1: ஜெயஸ்ரீ ஷர்மா வழங்கும் ஆலோசனைகள்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   08 , 2020  00:45:09 IST

கர்ப்பம் தரித்தல் முதல் குழந்தை பிறப்புவரை எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவாக விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா:

 

” பொதுவாக அதிக பெண்கள் கர்ப்பமாக இருப்பதை முதல் மூன்று மாதங்களுக்கு பிறகே கண்டறிவது வழக்கம். இப்போது கர்ப்ப காலத்தை பற்றி யூடியூப் வீடியோக்கள், கட்டுரைகள் போன்றவை ஏற்படுத்திய விழிப்புணர்வால் கர்ப்பமாக இருப்பதை சில வாரங்களிலே கண்டறிந்து விடுகிறார்கள்.

 

கர்ப்பமாகிவிட்டால் என்ன சாப்பிடுவது என்ற குழப்பம் அனைவருக்கும் வருது இயல்புதான். ’ஜங் புட்ஸை (பர்கர், பீட்சா, கோக், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ்) தவிர்க்க வேண்டும். நமது அம்மாக்கள் நமக்கு என்ன சமைத்து தருவார்கள் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் சமைக்கும் சாதாரண உணவு வகைகளை சாப்பிடலாம்.  அதுபோல் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று பிடிக்காத உணவுகளை வற்புறுத்தலால் சாப்பிட வேண்டாம். சிலருக்கு பால் பிடிக்காது. பாலில் முக்கிய விட்டமின்கள் இருக்கிறது. வற்புறுத்தலால் பிடிக்காமல் பால் சாப்பிடுவதைவிட அவர்கள் தயிர், மோர் சாப்பிடலாம்.

 

வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படும்போது சாப்பிட முடியாது. அப்போது மனதை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள். சிலருக்கு பிடித்தவர்களிடம் போன் பேசினால் எல்லாம் மறந்துவிடும். அப்படி ஒரு போன் காலில் பேசிக்கொண்டே சாப்பிட்டுவிடுங்கள். காலை உணவை தவிர்ப்பது உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் கெடுதல்.

 

எந்த உணவு நம் உடலுக்கு சரிவருமோ அதை சாப்பிடலாம். முடிந்தவரை ஹோட்டலில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். கடை உணவுகள் சாப்பிடுவதால் டைபாய்டு போன்ற காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலத்தில் வழக்கத்தை விட நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும் . சமைக்க முடியவில்லை என்றாலோ வேறு  காரணங்களால் ஹோட்டலில் சாப்பிடும் நிலை ஏற்பட்டால் நன்றாக அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது ( இட்லி, இடியாப்பம் போன்றவை)

 

முதல் ஐந்து மாதங்கள் வரை உங்கள் விருப்பப்படி தூங்கலாம். அதற்கு பிறகு மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். கருப்பைக்கு செல்லும் பெரிய ரத்தக்குழாய்கள் முதுகெலும்பை ஒட்டிதான் இருக்கின்றன.  மல்லாந்து படுக்கும்போது கருப்பையின் முழு எடையும் ரத்தகுழாய்களை அழுத்துகிறது. இதனால் கருப்பைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிடும். கர்ப்பிணிகள் அவர்கள் வசதிக்கு ஏற்பட தலையணைகளை பயன்படுத்துகொள்ளலாம். pregnancy Pillow என்று விற்பனை செய்யப்படுகிறது. அதையும்கூட பயன்படுத்தலாம்.

 

 

கர்ப்ப காலத்தில் முடிந்தவரை அதிக தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

 

HBsAg மற்றும் HIV பரிசோதனை செய்துகொள்வது முக்கியமான விஷயம். இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதாலேயே ஒருவருக்கு இவை இரண்டும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். HBsAg மற்றும் HIV கண்டறியப்பட்டாலும் சரியான மருந்துகளை எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு பரவாமல் தடுக்கலாம்.

 

கர்ப்பகாலத்தில் தைராய்டு மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தை மூளை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் மிகவும் முக்கியம். கர்ப்பகாலத்தில் ஒருவருக்கு நீரிழிவு நேய் ஏற்பட்டால்..குழந்தை பிறந்து சில ஆண்டுகளுக்கு பிறகு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோய் ஏற்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, உடல் பயிற்சி , சரியாக உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

 

கர்ப்பகாலத்தில் மார்பகம், வயிற்றுப்பகுதி, தொடை பகுதி, பின்பகுதிகளில் எடை அதிகரித்து தோல் விரிவடையும்.  இதனால் அரிப்பு ஏற்படும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் தேய்த்தால் அரிப்பு நின்றுவிடும். எண்ணெய் பயன்படுத்த விரும்பாதவர்கள் cocoa butter இருக்கும் moisturizer க்ரீம்களை அல்லது லோஷன்களை பயன்படுத்தலாம்.

 

கர்ப்பத்தை முன்பே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பான ஆலோசனைகள் பெறலாம். கர்ப்பம் தரிப்பதற்கு  முன்பு ரூபெல்லா என்று கூறப்படும் ஜெர்மன் மீசல்ஸ் நோய் இருப்பதை கண்டறிய பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். ரூபெல்லா இருப்பதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டால் தடுப்பூசி எடுத்துகொள்ள வேண்டும்.

 

காப்பர் டி பற்றிய தவறான கருத்துக்கள் அதிகரித்து வருகிறது. குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவதற்கு காப்பர் டி தான் சரியான ( குறைந்த பொருட்செலவும்கூட)  தேர்வு. பல கோடி இந்திய பெண்கள் இதைதான் பயன்படுத்துகிறார்கள். காப்பர் டி பயன்படுத்தும்போது 98 சதவிகிதம் பலன் இருக்கிறது. புதுமணத் தம்பதிகள் காப்பர் டி பயன்படுத்த  வேண்டியதில்லை. முதல் குழந்தை பிறந்த பிறகு இதை வைத்துக்கொள்வது சிறந்தது.

 

கர்ப்பிணிகள் உடல் உறவில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணமும் பரவலாக இருக்கிறது. உடலுறவு வைத்துக்கொள்ளகூடாது என்ற விதிகள் எல்லாருக்கும் பொருந்தாது. சில தம்பதிகளை மருத்துவர்கள் உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்று கூறுவார்கள் அவர்கள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் இது கணவன் - மனைவியின் புரிதல்கள் சமந்தப்பட்ட விஷயம்.

 

சட்டப்படி கருக்கலைப்பு செய்வதற்கு எல்லா பெண்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் சிலர் திருமணமாகி சீக்கிரமாக கர்ப்பமாவதால் குழந்தையை கலைக்க வேண்டும் .. நாங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்கிறார்கள். அப்படி கேட்கும் எல்லோரும் பின்னாட்களில் ஏதேனும் பிரச்சனை வருமா ? என்பார்கள்.

 

கருக்கலைப்பால் உடல் சார்ந்த பிரச்சனைகளைவிட மனம் சார்ந்த பிரச்சனைகளைதான் அதிகம். இதனால் பெண்களுக்கு அதிகம் குற்ற உணர்வு ஏற்படுகிறது. பின்நாட்களில் அந்த குற்ற உணர்விலிருந்து அவர்களால் விடுபட முடிவதில்லை.

 

பப்பாளி, அன்னாசிப் பழம் சாப்பிட்டால் எளிதில் கருகலைந்துவிடும் என்பது முற்றிலும் தவறான நம்பிக்கை. இதில் எந்த உண்மையும் இல்லை.

 

கர்ப்பிணிகள் எப்படி உடலைப் பார்த்துகொள்கிறார்களோ அதுபோல மனதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விவாதம், சண்டை ஆகியவற்றிலிருந்து தள்ளி இருக்க வேண்டும். பிடித்த பாடல்களை தொடர்ந்து கேட்க வேண்டும்.

 

குழந்தை பிறந்த பிறகு யாரும் மருத்துவரிடம் வருவதில்லை. ஆனால் பிரசவத்திற்கு பிறகுதான் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம். குழந்தை பிறந்த பிறகு தங்களை பெண்கள் கவனித்துக்கொள்வதேயில்லை. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. திடீரென்று ஒரு நாள் பழைய உடைகளை அணிவார்கள். அப்போதுதான் உடல் எடை அதிகரித்திருப்பதை கண்டுகொள்வார்கள். பிரசவத்திற்கு பிறகு உடல் பயிற்சியும் மருத்துவரை சந்திப்பதும்  அவசியமான ஒன்றாகும்..’’

 

-ஜெயஸ்ரீ ஷர்மா, எம்.பி.பி.எஸ், டிஜிஒ, எம்ஆர்சிஒஜி, சென்னை கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலையில் உள்ள Quality Cure Ladies Speciality Clinic -இல் மகப்பேறு மருத்துவர்.

 

தொடர்புக்கு: 8056087139

 

சந்திப்பு: வாசுகி

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...