???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   12 , 2020  04:29:22 IST


Andhimazhai Image
சிவப்பழகு முதல் தோலில் உருவாகும் அரிப்பு, படை தொல்லை வரை தோல் பிரச்சனைகள் தொடர்பான எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் தருகிறார்  சென்னையில் உள்ள சரும நல மருத்துவர் தனலட்சுமி.
 
 
சன்ஸ்க்ரீனா? குடையா?
 
 
தொலைக்காட்சி விளம்பரங்களில் காண்பிக்கப்படும் எல்லா சன்ஸ்கிரீன் க்ரீம்களும்  சூரிய கதிர்களில் இருந்து நம்மை காக்கும் என்று கூறமுடியாது. சன்ஸ்கிரீன் க்ரீம் என்பது  சூரிய கதிர்களிடம் இருந்து நம்மை காக்க வேண்டும். அதுபோல் நமது தோலுக்கு எந்த எதிர்விளைவையும் ஏற்படுத்தக்கூடது. மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் சன்ஸ்கீரின்கள் அதிக பலன் அளிப்பதாக இருக்கிறது. ஒருவரின் வயது, அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு சன்ஸ்கிரீன் க்ரீம்களை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். பருக்கள் அதிகம் வரும் வயதில் சிலர் இருப்பார்கள்.  சிலர் வயதானவர்களாக இருப்பார்கள். அதேபோல் சிலர் வெளியிலில் அலையும் வேலை செய்வார்களாக இருப்பார்கள், சிலர் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள் சிலர் அலுவலக வேலைக்கு செல்வர்கள்.
 
 
 
 அதனால் அவரவர் வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறு சன்ஸ்கிரீன் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். எண்ணை பசைத்தன்மை கொண்ட சருமம் இருப்பவர்கள் எண்ணை தன்மை கொண்ட சன்ஸ்கீரின் க்ரீம்களை பயன்படுத்தக் கூடாது. இதனால் அவர்களுக்கு பருக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதுபோல் வறண்ட சருமம் கொண்டவர்கள் மாட் அல்லது ஜெல் வடிவில் இருக்கும் சன்ஸ்கிரீன்களை பயன்படுத்தக்கூடாது. அதுபோல் சன்ஸ்கிரீன்கள் 50 முதல் 60 சதவிகிதம் வரைதான் சூரியக் கதிர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அதனால் வெளியில் செல்லும் போது குடை எடுத்து செல்வது அதிக பயன் தரும்.
 
 
அழகுக்கு உதவுமா க்ரீம்கள்?
 
 
சிவப்பழகு தரும் என்று கூறும் எந்த க்ரீம்களும் பயன்தருவதில்லை. ஆனால் இதை பயன்படுத்தினால் ’பளிச்சென்று தெரிகிறது’ என்ற எண்ணமும் பழக்கமும் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. சிலருக்கு இதனால் முகப்பரு ஏற்படுகிறது. தோலுக்குள் இருக்கும் பருக்கள் இன்னும் ஆழமாக அப்படியே இருந்துவிடுகிறது.
 
 
ஆயில் ஸ்கின் ( oily skin)  மற்றும் டிரை ஸ்கின் ( DRY skin ) என்றால்  என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். முகம் கழுவி சில மணி நேரத்திலே எண்ணை வழிகிறது என்று சிலர் கூறுவார்கள் அப்படி உணர்ந்தால் அவர்களுக்கு ஆயில் ஸ்கின். முகம் கழுவிய பிறகு எந்த வேறுபாடும் இல்லாமல் சாதாரணமாக அவர்களது சருமம் இருந்தால் அவர்கள் நார்மல் ஸ்கின் கொண்டவர்கள் ( NORMAL skin ). சிலருக்கு திட்டு திட்டாக வெள்ளையாக தெரியும் அவர்கள் டிரை ஸ்கின் ( Dry skin) கொண்டவர்கள். 
 
 
வயது, மரபணு, ஹார்மோன் ஆகிய மூன்று காரணிகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக முகப்பரு ஏற்படுகிறது. அதிக கலோரிக்கள் நிறைந்த உணவுகள் அதாவது பொரித்த உணவுகள், ஐஸ்க்ரீம்,  இனிப்பு அதிகம் உள்ள உணவுகள் உற்கொள்ளும் அளவை குறித்து கொண்டால் முகருப்பரு வருவது குறையும்.
 
 
மாய்ஸ்சுரைசர்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது வாஸ்லின் பயன்படுத்தலாம். குழந்தைகளும் வயதானவர்களும் முகத்திலும்கூட தேங்காய் எண்ணெய் அல்லது வாஸ்லின் பயன்படுத்தலாம். 10 முதல் 50 வயதுவரை உள்ளவர்கள் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் அல்லது வாஸ்லின் பயன்படுத்தினால் முகப்பரு வரும் வாய்ப்புகள் இருப்பதால் முகத்தை தவிர்த்து மற்ற இடங்களில் பயன்படுத்தலாம். இரண்டையும்  விரும்பாதவர்கள் liquid paraffin பயன்படுத்தலாம்.
 
 
தேங்காய் எண்ணெய்யை  எப்படி பயன்படுத்துவோமோ அதுபோல் இதையும் பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானரீதியாக பார்த்தல் fairness treatment தேவை இல்லை என்றுதான் கூறவேண்டும். அழகு முக்கியமாக கருத்தப்படும் துறைகளில் நீங்கள் வேலை செய்தால்,  சிவப்பாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அவர்கள் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மற்றவர்களுக்கு இது முக்கியம் இல்லை என்பதை எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் எடுத்துக்கூறுவோம். ஆனால் அதையும் மீறி நாங்கள் சிவப்பாக வேண்டும் என்பார்கள். 
 
 
வெள்ளையாகும் சிகிச்சை முறையால் ஏற்படும் மாற்றங்கள் மூன்று முதல் ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும். மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் வெள்ளையாக வேண்டும் என்பதற்காக ஸ்டிராய்டு கலந்த மருந்தை எடுத்துகொண்டால் தோல் சுருங்கி வயதான தோற்றம் ஏற்படும். எந்த காரணத்தைக்கொண்டும் வெள்ளையாக வேண்டும் என்பதற்காக ஸ்டிராய்டு கலந்த மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.
 
 
எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் அதிக நேரம் வெளியிலில் சுற்றினால் கருத்துவிடுவோம். அதுபோல் காய்கறிகள், பழவகைகளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தை வெள்ளையாக்கும். வெள்ளையாக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முதலில் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும், நன்றாக தூங்க வேண்டும். அதுபோல் யோகா, தியானம் செய்தால் முகம் பொலிவாக இருக்கும்.
  
 
படையும் நடுங்கும்!
 
 
 படை என்ற தோல் நோயை மக்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. ஒருவருக்கு படை நோய் ஏற்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலம் முடியும் வரை அவர்கள் மருந்துகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் சரியாகிவிட்டது என்று நிறுத்திவிடுவார்கள். இதனால் மேலும் படை அதிகரிக்கும்.
 
 
படை வருவதற்கு முக்கிய காரணம்  நாம் அணியும் உடைகள்தான்,. நைலான் ஆடைகள்,  ஜீன்ஸ், லெக்கின்ஸ், இறுக்கமாக உடைகள் அணிவதால் படை ஏற்படலாம்.  அதுபோல் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதாலும் படை ஏற்படும். ஆடைகளை நன்றாக வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும். மற்றவர்களின் உடைகள், துண்டுகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அவர்களுக்கு படை பாதிப்பு இருந்தால் நமக்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுபோல் துணியை துவைத்து பயன்படுத்த வேண்டும். மேலும் படை பாதித்த இடங்களை துடைக்க தனித் துண்டு பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் உடலில் மற்ற இடங்களுக்கு  படை பரவாமல் தவிர்க்கலாம்.
 
 
பிறப்புறுப்புகளில் வரும் வியாதிகள் எல்லாம் பாலின சமந்தப்பட்ட வியாதிகள் என்று நாம் நினைக்கக்கூடாது. சேலை கட்டும் பெண்களுக்கு இடுப்பிலும், ஆண்களுக்கு தொடை இடுக்கிலும் படை வருவது இயல்பான ஒன்றுதான். இதைப்பற்றி வெளிப்படையாக மருத்துவரிடம் கூறலாம்.
 
 
(மருத்துவர் தனலட்சுமி எம்டி, டிடி, டிஐபி என்பி,
தொடர்புக்கு: 9841092452)
 
 
சந்திப்பு: வாசுகி
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...