???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   17 , 2020  20:11:25 IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலா, ராஜலட்சுமி, தனலட்சுமி. இவர்கள் சமீபத்தில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர்.

இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் வாய் பேச இயலாத தங்கையை மதம் மாற்றியுள்ளனர். தொடர்ந்து பன்னீரின் மனைவி இந்திராவையும் மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்த இந்திராவின் உறவினர்கள், சனிக்கிழமை அன்று ஊர்க்கூட்டம் போட்டு கலா உள்ளிட்டவர்களை அழைத்து கண்டித்துள்ளனர். அப்போது கலா, தானே தனது உடைகளைக் கிழித்துக் கொண்டு நிலைமையை விபரீதமாக மாற்ற முயன்றார் என்கிறார் பன்னீர்.

அதன்பிறகு ஆத்திரமடைந்த கலா, மூக்குடியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தன்னையும் தனது மகளையும் மானபங்கம் செய்ய முயன்றதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகப் பரவியதும் அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம், அறந்தாங்கி காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறி்தது விசாரித்த போலீசார் உண்மையைக் கண்டறிந்த பின்னர், கலா உள்ளிட்டோர் மீது மதக்கலவரத்தை துாண்டும் விதமாக செயல்பட்ட பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர்.பின்னர், கலா, ராஜலட்சுமி, தனலட்சுமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...