???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ட்ரம்பைப் பார்த்து நடுவிரல் காண்பித்த பெண்: தேர்தலில் வெற்றி!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   07 , 2019  00:29:57 IST


Andhimazhai Image

அமெரிக்க அதிபர் வாகனத்தில் சென்றபோது அவரை நோக்கி நடுவிரலைக் காண்பித்த பெண், அங்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றியடைந்துள்ளார்.

 

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவில் நடைபெற்ற மாநில நிர்வாக தேர்தலில் ஜூலி பிரிஸ்க்மேன் என்பவர் வெற்றிபெற்றுள்ளார். தன் மாவட்டப் பிரதிநிதியாக இவர் செயல்படுவார். குடியரசுக் கட்சி வேட்பாளரை இவர் தோற்கடித்துள்ளார். இவரின் வெற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

 அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்த ஜூலி பிரிஸ்க்மேன், 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் காரில் சென்றபோது நடுவிரலை காட்டினார். சைக்கிளில் இவர் சென்றவாறே கையை உயர்த்தி சைகை காண்பிக்கும் அந்த புகைப்படம் வைரலாக பரவியது. ட்ரம்புக்கு ஜனநாயக ரீதியாக காண்பிக்கப்பட்ட  எதிர்ப்பாக இது கருதப்பட்டது. இதன் விளைவாக அவர் வேலையை இழக்க நேரிட்டது.

இதுதொடர்பாக 2017ம் ஆண்டு அவர் கொடுத்த பேட்டியில் ‘ எனது கருத்தை தெரிவிக்க சிறந்த வழி இதுதான் என்று தோன்றியது. புல்லட் ஃபுரூப் காரில் செல்லும் அதிபருக்கு எனது குரல் கேட்க வாய்ப்பில்லை என்பதால் இதை செய்தேன்’ என்று கூறியிருந்தார்.

 

கஸாலா ஹஸ்மி என்ற பெண் இத்தேர்தலில் அங்கே ஆட்சிக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு வரும் முதல் இஸ்லாமியர் இவர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...