???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பழங்குடியின குழந்தைகளுக்காக தினமும் 18 கிமீ சாகசப் பயணம்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   18 , 2020  00:07:46 IST


Andhimazhai Image

ரேலு வாசவி ஓர் அங்கன்வாடி பணியாளர். இவர் தினமும் 18 கிமீ ஆபத்தான சாகசப் பயணம் மேற்கொள்கிறார். பசியுடன் காத்துக்கிடக்கும் குழந்தைகளுக்கு தேவையான உணவை அளிக்க நர்மதா நதிக்கு அப்பால் இருக்கும் பழங்குடியின கிராமங்களுக்கு அவர் படகில் செல்கிறார். ரேலுவின் இந்த பயணம் மகாராஷ்டிர முதல்வரின் கவனத்திற்கு சென்று பாராட்டைப் பெற்றுள்ளது.

 

மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்திலுள்ள சிமால்காடி எனும் பழங்குடியின கிராமத்தின் அங்கன்வாடி பொறுப்பாளர் தான் ரேலு. இந்த அங்கன்வாடியின் பொறுப்பில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. அதோடு நர்மதா நதியையும் கடக்க வேண்டும். இதற்காக உள்ளூர் மீனவர்களின் படகை எடுத்து செல்லும் ரேலு, வாரத்தில் 5 நாட்களுக்கு அந்த கிராமங்களுக்கு செல்கிறார். அங்கு புதிதாக பிறந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 25 குழந்தைகள், 7 கர்ப்பிணிகளின் உடல்நலத்திற்கு ரேலு தான் பொறுப்பு. கொரோனா அச்சுறுத்தல் சூழலிலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தவறாமல் பழங்குடியின கிராமங்களுக்கு அவர் செல்கிறார்.

 

“கொரோனா காலத்திற்கு முன்பு தாய்மார்களும், கர்ப்பிணிகளும் தமக்கு தேவையான உணவு பொருட்களை அங்கன்வாடி நிலையத்திற்கு வந்து பெற்றுச் சென்றனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நிலைமை மாறியது. அவர்கள் கிராமங்களை விட்டு வருவதற்கே அச்சப்படுகிறார்கள். எனது பொறுப்பில் உள்ள இரண்டு கிராம மக்களும் அங்கன்வாடி வருவதை நிறுத்திவிட்டார்கள். எனவே தான் அவர்களது இருப்பிடத்திற்கே உணவு பொருட்களை கொண்டு செல்ல தீர்மானித்தேன்” என்கிறார் ரேலு.

 

அதிகாலையே பயணத்தை தொடங்கிவிடும் ரேலு, ஏழரை மணியளவில் பழங்குடியின கிராமங்களை அடைகிறார். அங்கு பணிகளை முடித்துவிட்டு மதியவேளையில் திரும்பினால் மாலை தான் வீடு செல்ல முடியும். படகுப் பயணம் மட்டுமல்ல, கிராமத்தை அடைய அதன் பிறகு மலைகளையும் அவர் ஏறி கடக்க வேண்டும்.

 

“இதுவொன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. மாலையில் வீடு திரும்பிய பிறகு எனது கைகள் கடுமையான வலியை கொடுக்கும். ஆனால் ஊட்டச்சத்துமிக்க உணவுக்காக என் வருகையை எதிர்பார்த்து இருக்கும் குழந்தைகளையும், தாய்மார்களையும் எண்ணும்போது இந்த வலி ஒரு பொருட்டல்ல” என்பது ரேலுவின் பதிலாக இருக்கிறது.

 

ரேலுவின் தன்னலமற்ற சேவையை உணர்ந்த பழங்குடியின கிராம மக்கள், அவரது பணியை நெகிழ்ச்சியுடன் பாராட்டுகிறார்கள். இது மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அலுவலகம் வரை எட்டியிருக்கிறது. நந்தூர்பார் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரி, முதல்வரின் வாழ்த்துகளை ரேலுவின் கிராமத்திற்கே வந்து தெரியப்படுத்தியிருக்கிறார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...