அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இப்படி ஏமாந்து, பெத்த குழந்தையைக் கொன்னுட்டியே ரேஷ்மா!

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   05 , 2021  16:10:09 IST


Andhimazhai Image

சமூகவலைதளங்களை சரியாக கையாளத் தெரியாததால் ஏற்படும் விபரீதங்கள் உயிரையே பறிக்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி சிலர் தங்களின் வாழ்க்கையை தாங்களே அழித்துக் கொள்கின்றனர். சமீபத்தில், கேரள மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று த்ரில்லர் மூவிக்கான கதையைப் போல் உள்ளது.
 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அருகேயுள்ள பாந்தனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி மோகனன். அவருடைய மனைவி ரேஷ்மா, வயது 24. இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த மாதம் அவருக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது. அதில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். வீட்டில் யாருக்குமே தெரியாமல் அன்று இரவே குழந்தையின் கழுத்தை நெரித்து, கொலை செய்து குழிதோண்டிப் புதைத்து விட்டிருக்கிறார் ரேஷ்மா.


குழந்தை குறித்து கணவர் மோகனன் கேட்டபோது,  “குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டதாக” கூறியுள்ளார் ரேஷ்மா. ஆனால் ரேஷ்மா  மீது சந்தேகம் அடைந்த மோகனன், இந்த சம்பவத்தை அப்படியே விடாமல் தீவிரமாக விசாரித்துள்ளார். அதில், குழந்தையை கொலை செய்து புதைக்கப்பட்டதை அறிந்த மோகனன், பாந்தனூர் போலீஸ் நிலையத்தில் ரேஷ்மா மீது புகார் கொடுத்துள்ளார்.


புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய காவல் துறைக்கு, அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. ரேஷ்மாவுக்கு, முகநூல் மூலம் அனந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேரில் சந்திக்காமலேயே நீண்டகாலமாக பேசி வந்துள்ளனர். இந்த பேச்சு ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. அனந்துவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட ரேஷ்மா, குழந்தை இதற்கு இடையூறாக இருக்கும் என்பதாலேயே, குழந்தையை கொலை செய்து புதைத்துள்ளார்.


குழந்தையை கொலை செய்தது பற்றிய விவரத்தை, தனது காதலன் அனந்துக்கு அவர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு ரேஷ்மாவை கைது செய்தனர் போலீசார், அவரை கொலை செய்வதற்கு தூண்டியதாக, அவரின் கள்ளக்காதலன் அனந்துவை கைது செய்யும் திட்டமிட்டனர்.


போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷ்மாவுடன் முகநூல் மூலம் அனந்து என்ற பெயரில் பேசி பழகியது 2 பெண்கள் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து அந்த பெண்கள் குறித்த விசாரணையில், அவர்கள் களுவாதிகள் என்ற ஊரை சேர்ந்த ஆர்யா (23), சுருதி (22) என்று தெரியவந்தது. இந்த இரண்டு பெண்களும் அனந்து என்ற பெயரில் ரேஷ்மாவிடம் ஆண் குரலில் பேசி நாடகம் ஆடியுள்ளனர். சுமார் ஒரு வருட காலம் அவர்கள் தொடர்ந்து ரேஷ்மாவிடம் பேசியுள்ளனர். அனந்து தன்னை உண்மையாகவே காதலிப்பதாக கருதி ரேஷ்மாவும் காதலிக்க தொடங்கியுள்ளார்.


அனந்துவை திருமணம் செய்துகொள்வதற்காக ரேஷ்மா, பெற்ற குழந்தையை கொலை செய்த விவரம் ஊடகங்களில் வெளியானதும் ஆர்யாவுக்கும், சுருதிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில், இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை  செய்துகொண்டனர். ரேஷ்மா கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களில் இந்த பெண்கள் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முகநூல் நட்பை சீரியசாகவும், விளையாட்டுத் தனமாகவும் கையாண்டால் ஏற்படும் இழப்பு என்ன என்பதை இந்த சம்பவம் கன்னத்தில் அறைந்தால் போல் உணர்த்தியுள்ளது.



 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...