???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு வெற்றியடைய விசிக வாழ்த்து!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   09 , 2019  06:33:32 IST


Andhimazhai Image
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு வெற்றியடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
"இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. அக்டோபர் 11, 12 ஆகிய நாட்களில் சென்னை அருகே நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமெனவும்; இந்திய-சீன வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பற்றாக்குறையைச் சரி செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமெனவும் நம்புகிறோம்.
 
இந்துமாக்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரித்துக்கொள்வதற்கும்; இலங்கையில் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவின் ஒத்துழைப்பைக் கேட்டுப்பெறுவதற்கும் இந்த சந்திப்பை நமது பிரதமர் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கிறோம். இந்திய –சீன நல்லுறவு வலுப்பெறுவது ஆசியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி உலக அமைதிக்கு இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
 
இந்நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு வெற்றிபெற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.
 
உலக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்கு தமிழ்நாட்டின் வரலாற்றுப் புகழ் வாய்ந்த தொன்மை மாநகரமான மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது நமக்குப் பெருமையளிக்கிறது.இத்தருணத்தில் இந்தியாவிலேயே தொல்லியல் வளம் நிறைந்த தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கவும் , தொல்லியல் ஆய்வுகளை மேம்படுத்தவும் பிரதமர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...