அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அரசியல் கட்சிகளுக்கு பணியாற்ற போவதில்லை: பிரசாந்த் கிஷோர் அதிரடி

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   22 , 2022  11:22:54 IST

இனி எந்த அரசியல் கட்சிக்காகவும் தாம் பணியாற்ற போவதில்லை என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். 
 
பீகாரை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், 'ஐ-பேக்' என்ற நிறுவனத்தை தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்களில் பல்வேறு வியூகங்களை அமைத்து கொடுத்து வருகிறார். பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை வெற்றி மகுடம் சூட வைத்ததில் இவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். இதற்கிடையே பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். அந்த கட்சியில் தேசிய துணைத்தலைவர் பதவியை பெற்றிருந்த அவர், பின்னர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பினார். 
 
இந்தநிலையில், பீகாரில் நடைமுறையில் உள்ள அமைப்பை மாற்ற திட்டமிட்டுள்ளேன். இனிமேல் எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்ற மாட்டேன்.பீகாரில் 3,000 கி.மீ நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை பற்றி கருத்து தெரிவித்த அவர், "இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் குஜராத்திலோ அல்லது உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களிலோ காங்கிரஸ் தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...