அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ட்விட்டரின் இடத்தைப் பிடிக்குமா கூ…. செயலி?

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   12 , 2021  16:23:29 IST


Andhimazhai Image

விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும் - ட்விட்டருக்கும் இடையேயான முரண்பாடு வந்த நிலையில் 'கூ' என்ற செயலிக்கு யோகம் அடித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் சிலர், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் பல்வேறு பிரபலங்கள் ட்விட்டர் கணக்கை புறக்கணித்துவிட்டு கூ தளத்தில் இணைந்திருக்கிறார்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தொடர்பில் பல்வேறு வெளிநாட்டு பிரபலங்களும் உள்நாட்டு இணையவாசிகளும் ட்விட்டர் வாயிலாக கருத்து கூறினர். அவர்களது பதிவுகள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை விமர்சித்தும் இருந்தது. அந்த பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு விடுத்த கோரிக்கைக்கு ட்விட்டர் நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

இத்தகைய சூழலில் தான் அரசு ஆதரவாளர்கள் பலரும் ட்விட்டருக்கு பதிலாக கூ தளத்தில் இணைந்து வருகின்றனர். ட்விட்டர் கணக்குபோன்ற வசதிகள் இருக்கும் கூ கடந்த 2020 மார்ச்சில் தொடங்கப்பட்டது. அதில் இப்போது 30 லட்சம் பயன்பாட்டாளர்கள் இணைந்துள்ளனர்.

அதிலும் கடந்த சில நாட்களில் தினமும் ஒரு லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்கின்றனர்    என  கூ செயலியின் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான அப்ரமேயா ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவர் முன்னதாக டாக்ஸிபார்ஷ்யூர் என்ற செயலியைத் தொடங்கி, ஓலாவுக்கு 200 மில்லியன் டாலருக்கு 2016-இல் விற்றவர். இதற்கு இடையில் வோகல் என்ற தளத்தை அவர் நடத்தி வந்தார்.

தற்போதைய சூழலில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், நடிகர் அனுபம் கெர், நடிகை கங்கனா ரணாவத், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே உள்ளிட்டவர்கள் கூ பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

தொடங்கி பத்து மாதமே ஆன கூ செயலிக்கு இந்த சூழல் உதவிகரமாக அமைந்துள்ளது.

‘சரி.. எல்லோரும் ட்விட்டரை விட்டுப் போய்விடுங்கள். நீங்கள் போனால் இந்த இடம் சுத்தமாக இருக்கும்’ என கிண்டலாக சொல்லி உள்ளார் முன்னாள் காஷ்மீர் முதல்வரான ஓமர் அப்துல்லா.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...