???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமைதியான ஆர்ச்சர்! கவிழ்த்தாரா கப்டில்?

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   15 , 2019  03:30:34 IST


Andhimazhai Image

நியூசிலாந்து 0 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. நியாயமாக இதுதான் நேற்றுமுடிந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் செய்திகள் பற்றிய தலைப்பாக இருக்கவேண்டும்.

 

இந்த உலககோப்பையின் மிக விறுவிறுப்பான ஆட்டம் அதன் இறுதி ஆட்டமாக அமைந்துவிட்டது. மென்மையான இதயம் கொண்டவர்களுக்கான ஆட்டம் அது அல்ல. இந்திய அணி மட்டும் இப்படி ஒரு ஆட்டத்தில் ஆடி இருந்தால் ஏகப்பட்ட பேர் இங்கே அழுத்தம் தாங்கமுடியாமல் பரலோகம் போயிருப்பது உறுதி. ஏதோ நியூசிலாந்து- இங்கிலாந்து என்பதால் நமக்கு கொஞ்சம் அழுத்தத்தின் அளவு குறைவு!

 

இதுவரை உலக கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டம் டையில் முடிந்ததில்லை. சென்ற கோப்பை வரை இறுதி ஆட்டம் டையில் முடிந்தால் இரு அணிகளும் உலக கோப்பையை பகிர்ந்துகொள்வதுதான் விதியாக இருந்தது. ஆனால் தற்போது சூப்பர் ஓவர் கடைபிடிக்க வேண்டும் என்று விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

 

நியூசிலாந்து 241 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயித்தபோது, அது எளிதாக அந்த இலக்கைத் துரத்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேசன் ராய், ரூட் போன்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, நியூசிலாந்து இங்கிலாந்தையும் இந்தியாபோல் காலி செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பென் ஸ்டோக்ஸ், தானொரு அதி சூரன் என்று நிரூபித்தார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், இன்னொரு இரண்டு ரன்கள் எடுத்தபோது நியூசிலாந்து வீரர் கப்டில் எறிந்த த்ரோ, ஒவர் த்ரோ ஆகி ஆறு ரன்கள் கிடைத்தன. இந்த ஓவர்த்ரோ தான் நியூசிலாந்தை கீழே குப்புறத்தள்ளீய த்ரோ. ஒருவழியாக 241 ரன்கள் எடுத்து டை ஆன பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் ’வெப்ப நிலை’ அதிகரிக்க ஆரம்பித்தது.

 

சூப்பர் ஓவரில் போட்டி முடிவாகும் என்றதும், இங்கிலாந்து சார்பாக பட்லரும்  பென்ஸ்டோக்ஸும் இறங்கினர். இருவரும் சேர்ந்து 15 ரன்கள் எடுத்தனர். பந்து வீசியவர் போல்ட்.  

 

இதை அடுத்து ஜேம்ஸ் நீஷ ம் - மார்ட்டின் கப்டில் இணை நியூசிலாந்து சார்பாக இறங்க,  பந்துவீச ஆர்ச்சரை அழைத்தார்  இங்கிலாந்து அணியின் மோர்கன். ஆர்ச்சர் 24 வயது இளம் வீரர். அணிக்கு வந்தது இந்த ஆண்டு மே மாதம் தான். வந்தவுடனே உலகக்கோப்பை ஆடியவர். அவர் வந்து மிக அமைதியாக நின்றார். இவ்வளவு சூப்பர் கூலாக நிற்கிறாரே ஆர்ச்சர் என்று ஆச்சர்யம் கூடியது.

 

நீஷம் சரி; ஏன் யா இந்த கப்டில்? இந்த தொடர் முழுக்க சரியாக ஆடவில்லை. ஏற்கனவே கடைசி நேரத்தில் ஓவர் த்ரோவில் நான்கு ரன்கள்கொடுத்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தாரை வார்த்தவர்( தோனியை அரை இறுதியில் ரன் அவுட் ஆக்கிய புண்ணியவான் இவர்தான் என்பது வேறு விஷயம்) என்று நியூசி ரசிகர்கள் நினைத்திருக்கலாம். அவருக்கு தான் செய்த தவறை சரிசெய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் செய்ய இயலவில்லை.

 

முதல்  பந்துக்கு  வைடு என்று அறிவிக்கப்பட்டது. 

 

முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் நீஷம். இரண்டாவது பந்தை சிக்சருக்கு விரட்டினார்.

 

இரண்டே பந்தில் நியூசிலாந்தின் ஸ்கோர் 9 ரன்கள். இன்னும் 4 பந்துகளில் 7 ரன்கள் எடுக்க வேண்டும்.

 

சூப்பர் ஓவரின் மூன்றாவது பந்தில் ஒருவழியாக இரண்டு ரன்கள் கிடைத்தது. நான்காவது பந்திலும் இரண்டு ரன்கள் எடுத்துவிட்டார் நீஷம். இரண்டு பந்துகள் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலை உண்டானது. ஆனால் ஐந்தாவது பந்தில் நீஷமால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பந்தை எதிர்கொள்ளும் கப்டில் இரண்டு ரன்கள் எடுத்தே ஆக வேண்டும் எனும் நிலை. பந்தை ’டீப் ஸ்கொயர்’ திசையில் அடித்தார் கப்டில். ராய் விரைவாக செயல்பட்டு பந்தை பட்லர் இருக்கும் ஸ்டம்ப் நோக்கி வீசினார். பட்லர் துடிப்பாக செயல்பட்டு இரண்டாவது ரன் ஓடிய கப்டிலை அவுட் செய்தார்.

 

இரு அணிகளும் மீண்டும் சம ரன்களை எடுத்ததால் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கே கோப்பை வழங்கப்பட்டது.

 

ஆனால் இது நியாயமே இல்லைதானே? என்ற புலம்பல் சத்தம் கடுமையாக கிரிக்கெட் ரசிகர்களிடம் கேட்கிறது. கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கவேண்டும் இல்லையா?

 

கற்பனைகளை விட நிஜம் மிக விசித்திரமானது. இந்த ரூலை உருவாக்கியபோது இப்படி ஒரு போட்டியை அமைப்பாளர்கள் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...