சினிமா, அரசியல், பிக்பாஸ் என நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக இயங்கிவருகிறார். இதுமட்டுமல்லாமல் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் சீசன் 6 போட்டியின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் அணிந்திருந்த உடை வைரலானது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டதும் சர்ச்சையாகி வருகிறது. விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் ஒருவரே தகுதியானவர்கள் என கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
மற்றொருபக்கம் சமீபத்தில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல் கலந்துகொண்டிருந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் காங்கிரஸுக்கு கமல் ஆதரவு தெரிவிப்பார் எனக் கூறப்பட்டது. அதற்கேற்ப காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.