???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 0 பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு. 0 பேருந்து, ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் 0 சிறுவர்கள், மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைப்பு: 0 தமிழக அரசு மதுக்கொள்கையை மாற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. 0 போரூர் மேம்பாலம் 25ஆம் தேதி திறப்பு 0 பத்து லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: 0 வெளிநாட்டுக்கான தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு 0 ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதால் அனைத்து வரிகளும் குறையும்.- உர்ஜித் படேல் கருத்து 0 குடியரசுத் தலைவர் பதவி: பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபிஐ விசாரிக்க முடியாது: முதலமைச்சர் 0 எம்எல்ஏ,எம்பிக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை 0 எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு 0 7 பேர் விடுதலை எப்போது?: சட்ட அமைச்சர் பதில் 0 வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேற்கு வங்கம்: பள்ளிகளில் வங்க மொழி கட்டாயம்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   16 , 2017  08:54:04 IST

மேற்கு வங்காள மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் வங்க மொழியை கட்டாயமாக்கியுள்ளது அம்மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை.மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கப்படாத ஆங்கிலவழிப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் வங்க மொழியை 2வது அல்லது 3வது மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மேற்கு வங்கத்திலுள்ள ஆங்கிலவழிப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் வங்க மொழியை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒரு பாடமாக 2ஆம் மொழியாகவோ, 3ஆம் மொழியாகவோ கற்பிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளும் வங்க மொழியைக் கற்பிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரளாவில் அனைத்துப் பள்ளிகளிலும் மளையாள மொழி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வங்க மொழிப் பாடத்தை தனது மாநிலத்தில் கட்டாயம் ஆக்கியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...