???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 0 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு 0 விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி! 0 கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு! 0 பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! 0 தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை 0 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு! 0 நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேற்கு வங்க வன்முறை: கடைசி நாள் பிரச்சாரத்துக்கு தடை!

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  00:34:01 IST

மேற்கு வங்கத்தில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. நடைபெற்ற முடிந்து ஆறு கட்ட வாக்குப் பதிவின்போதும் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. ஏழாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

தேர்தல் பிரச்சாரத்துக்கு பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று கொல்கத்தாவுக்குச் சென்றார். அப்போது அமித்ஷாவின் வாகனத்தில் கற்கள் வீசப்பட்டது. அவருடைய வருகைக்கு, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் கருப்பு கொடி காட்டனர். அதனையடுத்து, பா.ஜ.க மாணவர் அமைப்பினுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கும் இடையில் வன்முறை ஏற்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

கொல்கத்தாவின் முக்கியமான ஆளுமையாக திகழந்த இஷ்வார் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர். பா.ஜ.க மாணவர் அமைப்பினர், வித்யாசாகரின் சிலையை உடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இதுவரையில், இல்லாதவகையில் சட்டப்பிரிவு 324யை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

மேற்குவங்கத்தின் டும்டும், பாராசட், பாசிர்ஹட், ஜெய்நகர், மதுரபுர், ஜாதவ்புர், டைமண்ட் ஹர்பவுர், தெற்கு மற்றும் வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப் பதிவு மே 19-ம் தேதி நடைபெறவுள்ளது. வழக்கமான நடைமுறையின் படி, மே 17-ம் தேதி மாலை வரை தேர்தல் பிரச்சாரம் நடைபெறும். வன்முறையின் காரணமாக தேர்தல் பிரச்சாரத்தை மே 16-ம் தேதி 10 மணியுடன் முடித்துக் கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மேற்குவங்கத்தின் உள்துறை செயலாளர் அட்ரி பட்டாச்சார்யா, கூடுதல் காவல்துறைத் தலைவர் ராஜீவ் குமார் இருவரையும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...