???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரணை: மகளிர் ஆணையத் தலைவர்

Posted : புதன்கிழமை,   மார்ச்   13 , 2019  22:18:34 IST

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கிய நாதன், ‘கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்ததின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில் காவல் துறை முறையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
ஊடகங்கள் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். பெண்கள் குறைகளைச் சொன்னால், நடவடிக்கை எடுப்போம். பெண்ணின் பெயரை குறிப்பிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்துவோம். பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவோம். தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்துவோம். பாதிக்கப்பட்ட பெண்களை வெளிப்படுத்த கூடாது. ரகசியமாக விசாரணை நடத்துவோம். இந்த விவகாரம் தொடர்பாக 044௨855155, 044௨8592750 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம்’ என்று தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...