???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல்

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   31 , 2020  00:36:32 IST


Andhimazhai Image

பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 185 என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் 17.3 ஓவரிலேயே இலக்கை கடந்து எளிதாக வெற்றியை பெற்றனர்.

பஞ்சாபின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், "நாங்கள் டாஸ் ஜெயித்தால் பவுலிங்கை தான் தேர்வு செய்ய நினைத்தோம். இரண்டாம் பாதியில் பனியின் அளவு அதிகரிப்பதால் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும். இருப்பினும் இது மோசமான ஸ்கோர் அல்ல. கிறிஸ் அடித்த 99 ரன்கள் மிகவும் மதிப்பு மிக்கது. அவர் எங்களுக்கு வெற்றி பெற ஒரு வாய்ப்பினை பெற்று தந்தார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பனி மிகுந்த  கடினமான சூழலை ஏற்படுத்தியது. பந்தின் மீது அவர்களுக்கு பிடிமானம் இருக்காது. அதேசமயம், நாங்கள் மோசமாக பந்து வீசவில்லை. ஆனால், பனி, ஈரப்பதம் கொண்ட ஆடுகளத்தில் நாங்கள் இன்னும் சிறப்பாக பந்து வீச கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

பஞ்சாப் தரப்பில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 63 பந்துகளை சந்தித்த அவர் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து 99 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தானின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களில் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் (26 பந்துகள்), சஞ்சு சாம்சன் 48 ரன்கள் (25 பந்துகள்) என அதிரடியாக சேர்த்த ரன்கள் ராஜஸ்தான் வெற்றிக்கு உதவியாக அமைந்தது.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்றதால், கிங்ஸ் லெவன் பஞ்சாபின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, சென்னையுடனான அடுத்த போட்டியில் பஞ்சாப் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...