செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
“கவர்னருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்”: உதயநிதி ஸ்டாலின்
சுய லாபத்துக்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர் உதயநிதி…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
“கவர்னருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்”: உதயநிதி ஸ்டாலின்
Posted : திங்கட்கிழமை, ஜனவரி 23 , 2023 10:55:59 IST
சுய லாபத்துக்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. மதுரவாயல் எம்.எல்.ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முதல் உரை எழுதியது மதுரவாயல் தொகுதிதான். நான் பேசியதையெல்லாம் டி.ஆர்.பாலு ஞாபகம் வைத்துள்ளார். அவரது அனுபவம், நினைவாற்றல் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவர் பொருளாளராக உள்ளார். பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்கள் மூலம் பல கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கலைஞருக்கும் பேராசிரியருக்குமான நட்பு அவர்களுக்கு அப்புறம் மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. வெற்றி தோல்வி என பல்வேறு சூழ்நிலைகளில், நேரங்களில் கலைஞருக்கு உறுதுணையாக பேராசிரியர் இருந்துள்ளார். கலைஞருக்கு பின் மு.க.ஸ்டாலின்தான் என்று கூறி பெருமைப்படுத்தியவர் பேராசிரியர்.
|