???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'ஐபிஎல் தவறுகளை ஆராய்ந்து பார்க்க இப்போது நேரமில்லை’: தோனி

Posted : திங்கட்கிழமை,   மே   13 , 2019  02:40:55 IST


Andhimazhai Image
ஐபிஎல் தவறுகளை ஆராய்ந்து பார்க்க நேரம் இல்லை என்று கூறிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று விளையாடின. இப்போட்டியில் கடைசி பந்தில், 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4வது முறையாக மும்பை கோப்பையை வென்றது.
 
எப்போதும்போல இறுதி பந்துவரை இதய துடிப்பை அதிகப்படுத்தும் வகையில் ஆட்டம் இருந்தது. தோனியின் ரன் அவுட் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவாளர்களை மேலும் வருத்தமடைய வைத்தது. மேலும் அவருக்கு ரன் அவுட் கொடுத்தது சரியா என்ற சர்ச்சை எழுந்தது.
 
போட்டி இறுதிகட்டத்தை எட்டியபோது வாட்சனின் பேட்டிங்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலம் சேர்த்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி வழங்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12 கோடி 50 லட்சம் வழங்கப்பட்டது.
 
இது குறித்து தோனி கூறுகையில், "நாங்கள் ஒரு அணியாக இந்த தொடரை நன்றாக விளையாடி இருக்கிறோம். இறுதிப்போட்டி வரை எப்படி வந்தோம் என்று பார்க்கும்போது, மிகவும் சிறப்பாக விளையாடி இந்த இடத்திற்கு வந்தோம் என்று சொல்ல முடியாது.
 
மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. இரண்டு அணிகளுமே ஆட்டத்தின்போது தவறு செய்தது. இறுதி ஆட்டத்தில் குறைந்த தவறுகள் செய்த அணி வென்றுள்ளது.
 
ஐபிஎல் போட்டிகளில் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று ஆராய்ந்து பார்க்க தற்போது நேரம் இல்லை. உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதால் அதற்கான பயிற்சிகளை தொடங்க வேண்டும்" என்று கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...