???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் 0 கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் 0 நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

“நாங்களும் மெரினாவில் போராடுவோம்” - தொல். திருமாவளவன்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   02 , 2020  03:47:24 IST

எச். ராஜாவுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா என கேள்வியெழுப்பிய தொல். திருமாவளவன், எச். ராஜாவை கைது செய்யவில்லை என்றால் நாங்களும் மெரினாவில் போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
 
நெல்லை கண்ணன் கைதை கண்டித்து சென்னையில் இன்று தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் தொல். திருமாவளவன், இரா. முத்தரசன், தி. வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
இதன்போது பேசிய தொல். திருமாவளவன், “நெல்லை கண்ணன் எப்போதும் நகைச்சுவையாக பேசக்கூடியவர். சோலியை முடிக்க வேண்டுமென அவர் கூறியதை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்படியென்றால் எச். ராஜா எத்தனையோ முறை நேரடியாக வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, எச். ராஜாவையும் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்களும் மெரினாவில் போராடுவோம்” என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...