அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

"கைதி"யை பார்த்துவிட்டு "விக்ரம்" படத்தை பாருங்கள்: லோகேஷ் கனகராஜ்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   03 , 2022  06:54:36 IST

"கைதி"யை பார்த்துவிட்டு "விக்ரம்" படத்தை பாருங்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
 
இந்நிலையில், கைதியை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பாருங்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதுதொடர்பாக லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை பட வெளியீட்டுக்கு முன்‌ நான்‌ இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள்‌ முதல்‌ என்‌ சின்ன வயதிலிருந்தே “உலகநாயகன்‌“ ரசிகனாகவே இருந்திருக்கிறேன்‌, இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேள்‌, இன்னமும்‌ இது ஒரு கனவைப்‌ போலிருக்கிறது.
 
இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்குத்‌ துணை நின்ற நல்லுள்ளங்கள்‌ அனைவருக்கும்‌ என்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. விக்ரம்‌ பட வேலைகளைத்‌ தொடங்கிப்‌ பதினெட்டு மாதங்கள்‌ ஆகின்றன. ரத்தமும்‌ வியர்வையும்‌ சிந்தி (உண்மையாகவும்‌ கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும்‌, ஒரு மனிதரை, நம்‌ நாட்டின்‌ பெருமிதத்தை, “உலகநாயகள்‌“ கமல்ஹாசனைக்‌ கொண்டாடவும்‌ உழைத்திருக்கிறோம்‌.
 
வாய்ப்புக்கு நன்றி சார்‌, இந்தத்‌ திரைப்படம்‌ உங்கள்‌ ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது! இதை நான்‌ என்றென்றும்‌ மகிழ்வுடன்‌ நினைவில்‌ சேமித்திருப்பேன்‌! என்‌ அன்பான ரசிகர்களுக்கு, இன்னும்‌ சில மணி நேரங்களில்‌ விக்ரம்‌ திரைப்படம்‌ முழுக்க உங்கள்‌ சொந்தமாகிவிரும்‌.
 
அது உங்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக்‌ கொடுக்கும்‌ என்று நம்புகிறேன்‌! “கைதி“யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு “விக்ரம்‌” அழைத்துச்‌ செல்லும்‌ உலகுக்கு வாருங்கள்‌ என்று கேட்டுக்கொள்கிறேள்‌. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...