![]() |
டேனிஷ் சித்திக் படுகொலை செய்யப்பட்டாரா? - அதிர்ச்சியை ஏற்படுத்தும் அறிக்கை!Posted : வெள்ளிக்கிழமை, ஜுலை 30 , 2021 12:10:09 IST
![]()
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளரும், புலிட்சர் விருது வென்றவருமான டேனிஷ் சித்திக், ஜூலை16ஆம் தேதி ஆப்கான் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் நடந்த மோதலில் உயிரிழந்தார். அவரின் மறைவுச் செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, தாலிபான்களுக்கு எதிரான கண்டன குரல்கள் எழத் தொடங்கின.
அந்த அறிக்கையில், “ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருடன் சித்திக் செய்தி சேகரிக்க சென்றார். கந்தஹார் மாவட்டத்தின் போல்டாக் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, தாலிபான்கள் ராணுவத்தினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதனால் ஆப்கான் ராணுவ போர் தளபதிக்கும் - சித்திக்குக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சித்திக் அங்குள்ள ஒரு மசூதிக்குச் சென்ற நிலையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் தாலிபான்களுக்குத் தெரிய வர, அங்குச் சென்ற தாலிபான்கள் சித்திக்கின் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அப்போது அவர் உயிருடன் இருந்துள்ளார். சித்திக்கின் தலையைத் தாக்கியவர்கள் பின்னர் அவரது உடலைக் குண்டுகளால் துளைத்துள்ளனர். சித்திக்கை காப்பாற்ற நடந்த முயற்சியின் போதுதான் ஆப்கன் போர் தளபதியும், எஞ்சிய வீரர்களும் உயிரிழந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|