???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக்கோாி தி.மு.க சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸை நிராகரித்தது ஏன்: வெங்கயைய நாயுடு விளக்கம் 0 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: துணை பேராசிரியர் முருகன் கைது 0 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம் நிராகாிப்பு 0 ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது! 0 மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக யெச்சூரி மீண்டும் தேர்வு 0 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 0 இரண்டு இந்தியர்களுக்கு புலிட்சர் விருது! 0 நிர்மலா தேவிக்கு சாதகமாக செயல்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 0 வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 0 மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு! 0 நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் தலைமறைவு 0 பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற மாநாட்டில் தீ விபத்து 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்: 71 ஆயிரம் பேர் பார்வை!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   15 , 2018  23:55:55 IST

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடந்த இந்திய ராணுவ கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக போர்க்கப்பல்கள் கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதன்படி, கடந்த 13-ந் தேதி ‘சுமித்ரா’, ‘ஷயாத்ரி’, ‘கமோர்டா’, ‘ஐராவத்’ ஆகிய 4 போர்க்கப்பல்களும், 14-ந் தேதி கூடுதலாக ‘குக்ரி’ என்ற போர்க்கப்பலும் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
 
நிறைவு நாளான நேற்று ‘ஷயாத்ரி’ போர்க்கப்பலுக்கு பதில், ‘கிர்ச்’ என்ற மற்றொரு போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்கள் ஏதாவது ஒரு கப்பலை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
 
 
இந்த போர்க்கப்பல்களை பார்வையிட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று அதிகாலை 4 மணி முதலே தீவுத்திடலில் வந்து குவிந்தனர்.
 
கூட்டம் குவிந்ததை கண்ட ஏற்பாட்டாளர்கள், உடனடியாக பொதுமக்களை துறைமுகத்துக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, காலை 7 மணி முதலே பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். எனினும், கப்பற்படை அதிகாரிகளால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. மேலும், காலை 10 மணிக்கு மேல் தீவுத்திடலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டத்தை கண்டு பயந்து, தங்கள் வீடுகளுக்கே திரும்பிவிட்டனர். 
 
இதற்கிடையே போர்க்கப்பல்களை கடந்த 3 நாட்களில் 71 ஆயிரத்து 410 பேர் பார்வையிட்டதாகவும், நேற்று மட்டும் ஒரே நாளில் 33 ஆயிரத்து 492 பேர் பார்வையிட்டதாகவும் கடற்படை தெரிவித்து உள்ளது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...