![]() |
வாக்கி-டாக்கி முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்Posted : சனிக்கிழமை, நவம்பர் 21 , 2020 09:05:55 IST
காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
காவல்துறையில் செல்போன், சி.சி.டி.வி, GPS, பேட்டரி உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக மீண்டும் கடந்த ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் முறைகேடு தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே 18 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முதன்மை ஆவணங்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
|
|