???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஊரடங்கை மீறி தொழிலதிபர்கள் பயணத்துக்கு அனுமதி: சிக்கலில் மாட்டிய ஐபிஎஸ் அதிகாரி!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   10 , 2020  07:34:13 IST


Andhimazhai Image
 
 
மகாராஷ்டிரத்தில் யெஸ் பேங்க் ஊழலில் தொடர்புடைய தொழிலதிபர் குடும்பத்துக்கு கண்டாலாவில் இருந்து மகாபலேஸ்வர் வரை செல்ல முறைகேடாக அனுமதி வழங்கிய ஐபிஎஸ் அதிகாரி சிக்கலில் மாட்டி உள்ளார். ஊரடங்கு காலத்தில் அனுமதி வழங்கிய அவரை கட்டாய விடுமுறையில் அரசு அனுப்பி விட்டது.
 
மகாராஷ்டிர மாநில உள்துறை முதன்மைச் செயலாளர்  அமிதாப் குப்தா. இவர் மும்பை தொழிலதிபர்களான கபில் வாத்வான், தீரஜ் வாத்வான் ஆகியோர் குடும்பத்துடன் கண்டாலா பகுதியில் இருந்து மகாபலேஸ்வர் வரை செல்ல அனுமதி வழங்கினார். இவர்கள் மொத்தம் 23 பேர். குடும்பம் அவசரம் காரணமாக செல்கிறார்கள் என்று அனுமதிக் கடிதம் வழங்கினார். இவர்கள் மகாபலேஸ்வர் சென்று அங்கே தங்கள் பண்ணை வீட்டில் தங்கினர். இதை அடுத்து ஊரடங்கு இருக்கும் இவ்வேளையில் இவர்கள் எப்படி பயணம் செய்தார்கள் என்று உள்ளூர் மக்கள் புகார் அளிக்க, மாவட்ட நிர்வாகம் இவர்கள் அனைவரையும் பிடித்து, உள்ளூர் மருத்துவமனையில் தங்க வைத்துள்ளது. இதை அறிந்த பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மாநில அரசைக் கண்டித்தன.
இந்த குடும்பத்தினரின் பயணத்துக்கு அனுமதி அளித்த ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தலை இதில் உருண்டு, அவர் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
 
இந்த இரண்டு தொழிலதிபர்களும் நாட்டையே உலுக்கிய 4000 கோடி யெஸ் பேங் ஊழலில் தொடர்பு உள்ளவர்கள். பிணையில் இருக்கும் இவர்கள், விசாரணைக்குக் கூட கொரோனாவைக் காரணம் காட்டி ஆஜராக விலக்கு பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...