அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

Posted : புதன்கிழமை,   ஜுலை   20 , 2022  10:56:06 IST

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் பதவியை கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜிநாமா செய்தார். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் அனுர குமார ஆகிய 3 போ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. தேர்தலை தொடர்ந்து, நாடாளுமன்றம் சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் 225 இடங்களைக் கொண்டுள்ளது. அந்நாட்டில் ஒருவரை அதிபராக தேர்வு செய்ய பெரும்பான்மை எண்ணிக்கையான 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் வாக்களிப்பின்றி அந்நாட்டு நாடாளுமன்றம் நேரடியாக அதிபரைத் தேர்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...