???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரவு துரத்தும் மனிதர்கள்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   07 , 2017  02:05:45 IST


Andhimazhai Image
தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என்ற நான்கடுக்குத் திரைப்படக் கட்டமைப்பு  ஃபில்ம் ரோல் காலகட்டத்தோடு காலாவதியாகிவிட்டது எனலாம். இப்போது எல்லாம் டிஜிட்டல் மயம். வினியோகஸ்தர்கள் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார்கள். இந்த  தயாரிப்பாளர்கள் - திரை அரங்க உரிமையாளர்கள் நேரடிக்கூட்டு சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பாதகமாகியுள்ளதை நாம் அறிய முடியும். அப்படிப் பலமுறை வினியோகச் சிக்கல்களில் மாட்டி தற்போது வெளியாகியிருக்கும் படம் மீரா கதிரவனின் விழித்திரு.
 
 
வணிக சினிமாவின் சாத்தியப்பட்ட எல்லைகளுக்குள் நின்று சமூக அக்கறையுள்ள சினிமாவை எடுக்கப் போராடி வரும் இயக்குநர்களில் மீரா கதிரவனும் ஒருவர். அப்படியான சமூக அக்கறையுள்ள ஒரு வணிகத்திரைப்படம்தான் விழித்திரு. மீரா கதிரவனின் படைப்பு நேர்மை படத்தின் பல தளங்களிலும் பிரதிபலிக்கிறது.  தருமபுரி இளவரசனின் படுகொலை சம்பவமும் அதன் பின்னணியும்தாம் படத்தின் மையம். நாம் பத்தோடு பதினொன்றாகக் கடந்து போய்விட்ட, அதிகாரத்தின் பலியாடான இளவரசன் இந்தப்படத்தில் அக்கறையோடு நினைவு கூறப்பட்டுள்ளார் என்பது ஒரு சமூகக் கூட்டு மனதின் ஆசுவாசம்தான் என உறுதியாகச் சொல்லமுடியும்.
 
 
ஒரு அரசியல் படுகொலையை நேர்மையாக அணுக விரும்பும் பத்திரிகையாளன் கொல்லப்பட அதில் அப்பாவிக் காரோட்டியாக வந்து மாட்டிக்கொள்கிறான் முத்துக்குமார். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போலீஸிடம் போகும் அவன் பிறகு அவர்களின் கூட்டுச் சதி புரிந்ததும் தப்பியோடுகிறான். இடையிடையே இருளில் எதிர்ப்படும் தீக்குச்சி வெளிச்சத்தைப்போல ரேடியோ ஜாக்கி அபிநயா முத்துகுமாரை மீட்கப் போராடுகிறார்.
 
 
ஓர் இரவு, நான்கு கதைகள் என்று தொடங்கும் படம் பிறகு நான்கு கால் பாய்ச்சலில் ஓடத் தொடங்குகிறது. இரவு ஒரு அதிகார வெறியாக மாறி எல்லோரையும் துரத்துகிறது. சில்லறைத் திருடனான விதார்த், திருடியான தன்ஷிகா, மிச்சமிருக்கும் ஜமீந்தார் கிறுக்குடன் அவர்களைத் துரத்தும் தம்பி ராமையா, பணக்காரத்திமிருடன் எரிகா ஃபெர்னாண்டசைத் துரத்தும் ராகுல், தொலைந்து போன நாய்க்குட்டிக்காக தன் மகளுடன் இருட்டுக் கண்களுடனும் வெளிச்சச் சிரிப்புகளுடனும் தடுமாறி கடக்கும் வெங்கட் பிரபு, மரணம் துரத்தும் அப்பாவி கிருஷ்ணா என கதாபாத்திரங்களை படம் நெடுக அரசியல் அதிகாரக் கூட்டு ஒரு துயர நிழலைப்போல  துரத்திக்கொண்டேயிருக்கிறது.
 
 
இரவு முடிவதற்கு முன்னாள் அந்த ஆடு புலி ஆட்டம் முடிவுக்கு வருகிறது. அல்லது முடித்து வைக்கப்படுகிறது. அரசியல் அதிகார சதிவலையில் மாட்டிக்கொண்ட முத்துக்குமார் தன் உயிரை பலிகொடுத்து அந்த இரவின் மற்ற நல்ல மனிதர்களைக் காப்பாற்றுகிறார்.  
 
 
படம் நெடுக இழையோடும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள், இரவின் கூர்மையில் ஒளிரும் ஒளிப்பதிவு, குற்றமும், குற்றவுணர்ச்சியுடனும் வெளிப்படும்  கதாபாத்திரங்கள் படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள்.  எம்ஜிஆரை நன்றியோடு நினைவு கூறும் ரிக்‌ஷா தாத்தா, ’நாய் காணவில்லை’ போஸ்டரை பிரதியெடுத்துத்தரு  போஸ்டர் ஒட்டுபவர்கள், டெலிபோனுக்கு சில்லறை தந்துதவும் பிச்சைக்காரன், இரவில் சலித்துக்கொண்டே சவாரி போகும் ஆட்டோ ஓட்டுநர், என நல்லவர்களும், பக்திப்பட்டையடித்து லெக் பீஸுடன் சிக்கன் பிரியாணி தின்னும் காவல் அதிகாரி, குழந்தை சாராவைக் கடத்த முயலும் திருடர்கள், அதிகாரத்துக்குப் பயந்து நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லும் எஃப்.எம் முதலாளி என படம் நெடுகவும் நம்பகத்தன்மைமிக்க கதாபாத்திரங்கள் படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.
 
 
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. தம்பி ராமையாவின் கதாபாத்திரம், நள்ளிரவில் வீடு மாறும் ஜோடிக்காமம், டி. ராஜேந்தரின் குத்துப்பாட்டு என எல்லாமும் குறைகள்தான். அதை நாம் வணிக சாத்தியங்களை இட்டு நிரப்ப வந்த குறைகள் என்றும் கொள்ளலாம்.  
 
 
என்னது? இளவரசன்.. என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி பிணவறையில் கிடக்கும் அப்பாவி முத்துக்குமார் இன்னொரு இளவரசன் இல்லையா? அப்படியான ஒரு புரிதல் படத்தை இன்னும் மேலதிகம் புரிந்துகொள்ள நமக்கு உதவும். அப்படியான அரசியல் தளங்களைக் கொண்டதாலேயே விழித்திரு ஒரு முக்கியமான அரசியல் படமாகிறது.
 
 
-  சரோ லாமா - 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...